Friday, 19 December 2025

இராஜீவ் கோஸ்வாமி மீது பெட்ரோல் ஊற்றி எரி ! தீக்குளித்தார் என்று கூறி தியாகியாக்கிக் கலவரம் செய் !!

 


மண்டல் கமிஷன் பரிந்துரைகள், 1990 ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது அதற்கு எதிராக "உயர் சாதி"களைச் சேர்ந்த மாணவர்களை தூண்டி விட்டு பாரதிய ஜனதா கட்சி மறியல்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறச் செய்தது. அந்தப் போராட்டத்தின் போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து, அன்று,  ராஜீவ் கோஸ்வாமி என்ற இளைஞர் தீக்குளித்தார் என்று பரப்புரை செய்து, அவரை ஒரு தியாகியாகக் காட்டி அந்தப் போராட்டத்தை, சங்கிகள் தீவிரப் படுத்தலாயினர்.

 ஆனால், அன்றைய தேதியில் 20 வயதானவராக இருந்த  ராஜீவ் கோஸ்வாமி உண்மையில் தற்கொலை முயற்சி செய்யவில்லை. அந்த கலவரத்தின் பொழுது அவர் (புகை பிடிப்பதற்காக தனது முழுக்கால் சட்டையில் கீழ்ப்  பட்டியில்   தீக்குச்சியை உரசியபோது)  குனிந்திருந்த  நேரம் பார்த்து அவரது முதுகில்  மண்ணெண்ணெயை அல்லது பெட்ரோலை ஊற்றி மற்றவர்கள் ஊற்றி விட்டனர்.  இதனை அவர் தனது வாக்குமூலத்தில் காவலர்களிடம்  தெரிவித்துள்ளார். ஆனால் அதனைப் போலீஸ் விசாரணை செய்து உறுதிப்படுத்த இயலவில்லை.  இந்த உண்மையை, கட்டுரையாளர்   பிரேம் சங்கர் ஜா என்பவர்  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியிருந்தார்.


அந்தத் தீக்காயங்களால் இராஜீவ் கோஸ்வாமியின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் தனது 34 வரை வாழ்ந்து 2004 ஆம் ஆண்டு  மறைந்தார் 

அந்தப் போராட்டக் காலத்தில்,  ராஜீவ் கோஸ்வாமியை தியாகி என்று சங்கிகள் பரப்பரை செய்ததன்  காரணமாக மேலும் பலர் அன்றைய தேதியில் தீக்குளிக்க முயன்றார்கள்.