Saturday 27 January 2024

சங்கி எனப்படுபவர் யார்?

 பிராமண பயங்கரவாதக் கொள்கையான சதுர்வர்ணக் கொள்கையைச் சாணக்கியன் காட்டிய வழியில் பரப்ப முயலும் பிராமணனும், அந்தப் பயங்கரவாதக் கொள்கைக்காரர்களிடம் பணியாளாக இருந்து அவர்களது ஏவல்படி அந்தச் சதுர்வர்ண அமைப்பினை மீளவும் உருவாக்கி அதில் தனது எதிர்காலத் தலைமுறையை மறுபடியும் அடிமைகளாக ஆக்கிவைக்கத் துணைபோகும் பிராமணனல்லாதானுமே சங்கிகள்.





Saturday 18 November 2023

1927 ஆம் ஆண்டில் பெரியாரின் தொண்டு பற்றி வ. உ. சி !

 

பிராமணரும் பிராமணரல்லாதாரும்’  என்று கூறும் போது  யான் முக்கியமாகச் சென்னை மாகாணப் பிராமணரையும் பிராமணரல்லாதவரையுமே குறிக்கிறேன். பிராமணரல்லாதார்எனும்போது,   முகமதியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள்  என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன்.” (பக்கம் 91- வ.உ.சி-யின் நூற்கோவை -தொகுப்பாசிரியர் செ.திவான் - அருணவிஜய நிலையம் - சென்னை ).  பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள  ஒற்றுமையின்மையும் பகைமையும்  வளர்ந்து இப்போது  துண்டு விட்டுப் போகும்படியான  நிலைமைக்கு (Breaking point) வந்துவிட்டது.  உண்மைத் தேசாபிமானிகள் இப்பொழுது விரைந்து முன்வந்து பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்குமுரிய உண்மை காரணங்களை கண்டு பிடித்து ஒழிக்காத விஷயத்தில், நாம்  சுய அரசாட்சி என்ற பேச்சையும் கூட விட்டு விடும் படியான நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டு விடும் என்று யான் அஞ்சுகிறேன்... 


 நமது தேசத்தின் வடமாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்று நமது மாகாணத்தில் உள்ள சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன வெட்கக்கேடு!

 நமது மாகாணத்தில் நம்முடன் வசித்து வரும்  பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையின்மையையும் பகைமையையும் நீக்கி அவ்விரு வகுப்பினர்களுள்ளும் ஒற்றுமையை உண்டு பண்ண மாட்டாதார் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைகளையும்  நீக்கி அவ்விரு  வகுப்பினர்களுள்ளும்  ஒற்றுமையை உண்டாக்க போகின்றனறாம்!  இது புதுமையினும் புதுமை! 

பிராமணரக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும்சுதேச மன்னர்கள் அரசாட்சிக்கு உட்பட்ட நாடுகளில் ஜாதிச் சண்டைகள் இல்லை என்றும், நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்து விட்டால் ஜாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர்.  இந்த மூன்றும் முழுப்பொய்.

  பிராமணர் பிராமணரல்லாதார் சண்டைகளுக்கு காரணம் ஒன்றுமே இல்லையெனின்ராஜாங்கத்தாராலோ  மற்றவராலோ  அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது.  சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் ஜாதிச்சண்டைகள் இல்லாமல் இல்லை; அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. .. இரண்டாவது காரணம்மேற்கண்ட படி தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று  கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு  பிராமணர்கள் மற்ற ஜாதியர்களுக்கு  விதித்த அபராத தண்டனை. அத்தண்டனையை  மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள்  கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து  நம் திருவாளர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள்  பிராமணரல்லாதார்களுக்குக் கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள்  ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தித்  தங்கள் அபராத தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

 

 பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைக்குரிய மூன்றாவது காரணத்தைப  போக்குவதுதான்  மிகக் கஷ்டமான காரியம்.  இக்காரண  விஷயத்தைப் பற்றி தேசத்தலைவர்கள் என்று சொல்லப்படுகிற பிராமண சகோதரர்களில்  சிலர் பேசுகிற பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது  மிக வியப்புத் தோன்றுகிறது.  இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்ற (பிராமணரல்லாதார் அடங்கிய) ஒரு கட்சியாரை ஒழிப்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் இரட்டையாட்சிக்கு  உதவி புரிய வேண்டியவர்களாயிருக்கிறார்கள் என்று ஒரு பிராமணத் தலைவர் சிலர் தினங்களுக்கு முன் பேசியிருக்கிறார். ஆ! என்ன ஆச்சரியம்!

 நமது தேசத்தில் நூற பேர்களுக்கு மூன்ற பேர்களாயிருக்கின்ற நம் பிராமண சகோதரர்கள்நமது தேசத்து இராஜாங்க உத்தியோகங்களில் நூற்றுக்கு 97 வீதமும் அவ்வத்தியோகங்களில் இந்தியர்கள் பெரும் சம்பளத் தொகையில் நூற்றுக்கு 97 வீதமும் (இக்கணக்கு சிறிது ஏறத்தாழ இருக்கலாம்) அடைந்து வருகிறபோதுபிராமணரல்லாதார்கள் இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக  இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரை பலப்படுத்துகின்றார்கள் என்று காங்கிரஸ் தலைவர் என்னும் பிராமணர் ஒருவர் பேசுவாராயின், மற்றைப் பிராமணர்கள் என்னென்ன பேசத் துணிய மாட்டார்கள்?


மேலதிக விவரங்களுக்கு: 








Sunday 8 October 2023

Grateful P. Chidambaram Vs. Cruel Vallabhbhai Patel !

        “Leprosy is an infectious disease caused by bacteria called Mycobacterium lepre that hide in the coolest areas of the body….Like AIDS, today leprosy can be controlled by drugs. But, in poor countries, people still are not able to get the care they need. The same conditions of overcrowding, malnutrition and poor sanitation that caused the spread of leprosy in cities in the Middle Ages still exist today in places like India and Brazil”(*1). “Nerve damage and the resulting disabilities are the major causes of morbidity among leprosy patients…Compassion has never been more necessary than it is in the fight against this disease(*2). Equity analysis done by the World Bank in 2001 confirms that “the most socially vulnerable groups (Scheduled Castes and women below the poverty line) shoulder the highest burden of the disease”(*3). “In 2002, India accounted for about 70% of the world’s registered leprosy patients”(*4). 

 

Compassion-personified

 

There came on the scene, in the year 1982, the British-born Catholic nun Jacqueline Jean McEwan, through a Commonwealth agreement, as a medic to Bengaluru. Having seen the patients suffering from leprosy, she stayed put and continued her service through “a mobile clinic run by an NGO, the Society for the Welfare and Rehabilitation of Leprosy Patients. The organisation has residential accommodation for about 120 poor leprosy patients and the mobile clinic looks after about 1,000 leprosy patients in the village in the heart of the city”(*5). The HIV/AIDs patients are also treated there. Sister Jean additionally visits slums to tend to cancer patients. She was compassion-personified and was venerated as the Mother Theresa of Sumanahalli. No self-styled saint from the Chaturvarna social order came forward to render this service to the people afflicted by leprosy. On the other hand, evidence on record testify to the fact that the people who opposed the Chaturvarna social order had been called as “wicked” people and the King was directed to punish them through conspiratorial methods, one among them being to ensure that those “wicked” people get afflicted by leprosy. Chanakya, the first political terrorist of the world, had explained the manner in which such “wicked” people can be made to be affected by leprosy (*6). 

 

Every year, the residence permit of Sister Jean was renewed by the Government of India. But, in the year 2011-12, it was not renewed and the bureaucrats in the Foreign Regional Registration Office issued notice to her to leave the country by July 25, 2011. And, she had to leave.  


 

“The leprosy patients and families she has been helping for almost 30 years hoped fervently that a permanent solution would ensure they did not lose her…  ‘Yesterday, I went to Sumanahalli. The patients came and greeted me and one of the patients gave me a ring and a little cross...They welcomed me with garlands and bunches of flowers... all of them were crying. It was so sad,’ she told NDTV. The nun also said that, ‘I have got more from my patients and my people here...more than what I have given”, reported the NDTV(*7). 

 

Chidambaram demonstrated gratefulness

 

The news of her virtual expulsion by the bureaucrats had reached the ears of Mr. P. Chidambaram, the then Home Minister of India. He immediately called for the file, chided the heartless bureaucrats, ordered for the cancellation of the order and restored her visa “without limit of time”. “Orders are being issued today. She can stay as long as she likes,” Mr. Chidambaram said(*8), demonstrating the gratefulness of the nation. 

 

Rev. Keithahn

 

In the 1940s, Rev. Keithahn, an American Christian Missionary, was doing social service among the people of Karnataka and was very popular among them. He was the supporter of Indian independence struggle too.  The British rulers had, therefore, deported him in August, 1943. In the year 1946, the national government came into existence after the polls in 1945 and 1946 for Provincial Legislative Assemblies and Central Legislative Assembly. Vallabhbhai Patel was the Deputy Prime Minister, then, at the Centre.

 

Mr. Nijalingappa, President of the Karnatak Provincial Congress Committee, wrote a passionate letter to Vallabhbhai Patel on 18.09.1946 requesting for Rev. Keithahn to be invited back to Karnataka as he had been doing a very good service to the people of Karnataka. Nijalingappa said that the “only sin (of Rev. Keithahn) was that he espoused the cause of India. He was doing very good work along with the members of his family in Bangalore among labourers and students with whom he was very popular. All of them want him back in India. Now that there is  a national government functioning, it is desirable that the deportation order is cancelled. I, therefore, request that you may kindly see your way to have the matter of …”. 

 

 The ungrateful Vallabhbhai Patel

 

But, Vallabhbhai Patel, the Deputy Prime Minister, wrote back on 22.09.1946 insulting the reasoning of Nijalingappa  and rejecting his request, giving totally different reasons that demonstrated his bigotry and arrogance. His letter is reproduced below:


New Delhi

22 September 1946

 

“Dear Friend,

 

I have received your letter of the 18th instant. 

 

Why should you think that as the National Government has come into existence, orders of externment against foreigners should be cancelled? You do not mean to suggest that India is a place where all foreigners are welcome? There is something like reciprocity and few Indians are welcome outside their own country. If some foreign missionaries were deported by the past Government, why should this Government cancel their deportation orders? The past Government might have had good reasons to do so? The present Government, evidently, has no reason to change those orders.

Yours sincerely,

Vallabhbhai Patel.

 

(To)

S. Nijalingappa Esq.,

President,

The Karnataka Provincial Congress Committee,

Camp: Hubli.








He did not think it necessary that the nation must be grateful to such souls like Rev. Keithahn who had done yeoman service among the people and was popular because of that service. He abused his position and allowed his prejudice to prevail over the desire of the people of Karnataka.

 

His reply was nothing but his individual opinion while Nijalingappa’s letter had represented the legitimate  and just desires of the people of Karnataka. 

 

Treating South with contempt

 

He advised Nijalingappa not to welcome foreigners to India as Indians were not welcome outside India and that the Indians must reciprocate the same spirit. That “freedom fighter” was not ready to recognise the services of Rev. Keithahn who was expelled by the British only because he supported the independence of India from British rule. He had forgotten the role of Annie Besant.

 

 

The later half of the 1940s was the time when Congress Party was claiming that it was representing the entire India.  But, Patel had, at the same time, not cared to recognise the fact that Nijalingappa, the President of his own party in Karnataka, was, on the same analogy, representing the wishes of the people of Karnataka. It was habitual of Patel not to respect the wishes of the people of the all the four Southern states. He chose to ignore and insult Nijalingappa who was his own Party’s President representing the people of Karnataka. 

 

Religious bigotry of Patel

 

Patel used to allow only his personal prejudices and predilections prevail when he was in power, with any kind of power. History testifies to the fact that he chose to demonstrate his imperious attitude and had his way on all occasions throughout his career. His arrogance had cost the nation dear, on many fronts. He was the person mainly responsible for having brought in the Master and Servant attitude between the Congressmen of the North and the South. 

 

Patel allowed his religious prejudices to come to the fore more than his patriotism towards the nation. That would explain why the present Saffron government, shown to be headed by Mr. Narendra Modi of Gujarat, has chosen to erect a monumental statue only for Vallabhbhai Patel of Gujarat and not to the Father of the Nation, Mahatma Gandhi of Gujarat. 

 

==========================

 

Note: 

 

(*1) : Leprosy: Hansen’s Disease - by Karen Donnelly - 2002. 

 

(*2): Leprosy - by Alfica Sehgal, I. Edward Alcamo, David L. Heymann  - 2006.

(*3): Better health care systems for India’s poor: Findings, Analysis and Options - David H Peters.

(*4): The Rotarian - February 2005 - Page 53. 

 

(*5) : NDTV - 26.05.2011.

(*6) : In his Arthasastra, Chanakya says that “In order to protect the institution of the four castes, such measures as are treated of in secret science shall be applied against the wicked”. One of those secret means enumerated by him therein is that “The (smoke caused by burning the) mixture of krikalása and grihagaulika causes leprosy”. (Arthashastra: Book XIV - Secret Means - Chapter I : Means to  Injure an Enemy.) 

 

 

(*7) : NDTV – 26.05.2011.

 

(*8) : The Hindu 26.05.2011.


=========================================

Published in the monthly magaziwn Voice of OBCs in November 2015.










 







Saturday 9 September 2023

தமிழர் திராவிடரே! திராவிடர் அனைவரும் தமிழரே! ஆரியர் (பிராமணர்) அல்லாத அனைவரும் திராவிடரே! திராவிடம் என்ற சொல்லாட்சியின் தேவை!

  ஒரு காலத்தில்  இந்தத் துணைக் கண்டம் முழுதும்  தமிழே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும்  இருந்து வந்தது .  ஆரியர் நுழைவுக்குப் பின்னர்  அவர்களுடைய வேத மொழியும்  தமிழும் கலந்து  பல வட்டார மொழிகள்  வடக்குப் பகுதியில்  உருவாயின.  புத்தர் காலத்திற்குப் பிறகு  சமஸ்கிருதம் என்ற மொழி  செயற்கையாக  தமிழ் எழுத்தின் அடிப்படையிலேயே  உருவாக்கப்பட்டது .   அதன் பிறகு  சமஸ்கிருதத்திற்கு  முன்னர் உருவான  வடக்குப் பகுதி வட்டார மொழிகள்  பிராகிருதங்கள் என்று  பன்மையில்  அழைக்கப்பட்டன.  அந்தக் காலகட்டத்தில் தான்  தமிழ்  என்ற சொல்  வேத மொழியுடன் பி திரிந்து  திராவிடம் என்று ஆகியது.  இந்த வரலாற்று உண்மைகள்  இதே வலைதளத்தில் பல கட்டுரைகளில்  விரிவாகத்  தரப்பெற்றுள்ளன.  பின்னர்  காலப்போக்கில்  தென்பகுதியில்  உள்ள  மொழிகளை மட்டுமே  ஒட்டுமொத்தமாக  திராவிட மொழிகள் என்று  சுட்டிக்காட்டத் தொடங்கினர். அவற்றில் தெலுங்கு  கன்னடம் மலையாளம் ஆகியவை  முறையே  9, 10, 11 ஆம் நூற்றாண்டுகளில்  உருவாயின  என்ற விவரங்கள்  இதே வலைதளத்தில்  தரப்பெற்றுள்ளன. அந்த மூன்று மொழிகளில் உள்ள இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட காலகட்டங்களே அவை மூன்றும் அண்மைக்கால மொழிகள் என்ற உண்மையை என்றும் பறைசாற்றும்.

இந்தப் பின்னணியில்  தமிழ்நாட்டில் ஒரு சிலர்  திராவிடம் என்ற சொல்லை  நாம் பயன்படுத்தக் கூடாது என்றும்  தமிழர் என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்  கூறி வருகின்றனர் .  இதனுடைய  எதிர்மறை விளைவுகள் தமிழர்களை,  தமிழ் வரலாற்றை,  பெரும் அளவுக்கு பாதிக்கும் என்பதை  அவர்கள் அறிந்தாரில்லை.

 பேராயர்  ஹென்றி ஹேராஸ்  முதலாக பல வரலாற்று அறிஞர்கள்  சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரீகம்  என்று சாற்றியும், அந்தத் திராவிடம் என்பது தமிழ் என்று நிறுவியும் உள்ளனர். அவர்கள் தங்கள் நூற்களில்,  திராவிடம் மற்றும் ஆரியம் என்ற சொற்களைப்  பெருமளவு பயன்படுத்தித்  தங்களுடைய  ஆக்கங்களை  உலகுக்குக் கொடுத்துச் சென்றுள்ளனர்  இவர்களுடைய நூல்கள்  உலகம் முழுவதும்  வரலாற்று அறிஞர்களால் மிக ஆழ்ந்து படிக்கப் பெறுகின்றன. திராவிடத்திற்கும் தமிழுக்கும் இவர்கள் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. 

இன்று அரசியல் காரணங்களுக்காக, திராவிடம் என்ற சொல்லைத் தமிழர்கள் கைவிடுவோமானால், நாம் வீணாக ஆரியம் விரித்த வலையில் வீழ்வோம். ஆரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசின் சதிகளாலும், அவர்கள் விருப்பப்படி தமிழ்நாட்டைக் குதறி வைத்த .கோ.இராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகிய இருவரின் பல தமிழ் விரோதச் செயல்களாலும், வலுவிழந்து நிற்கும் தமிழ் நாட்டை, இன்றைய மலையாளிகளும்கன்னடர்களும்தெலுங்கர்களும் மதிக்க விரும்புவதில்லை. இவர்கள் இன்று தமிழ் நாட்டில் உள்ள சிலர்  நாம் தமிழர்கள்தாம், திராவிடர்கள் அல்லர் என்று சொன்னோமானால் அதற்காக மிகவும் மகிழ்ச்சியே அடைவர். 

இற்றைத் தமிழர்கள் மீது அரசியல் காரணங்களால் அவர்களுக்கு, அதாவது தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளிகள் ஆகிய மூவருக்கும், உள்ள வெறுப்பு உணர்வால், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்ற உண்மையை அவர்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சியோடு ஏற்பதில்லை. அந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் அல்ல என்றும் தமிழுக்கு முன் இருந்த மொழி (Proto-Tamil or Proto-Dravidian) என்றும் வீம்புக்குப் பரப்புரை செய்ய அவர்களில் சிலர் முயலுகின்றனர். அப்போதுதான் அவர்களுடைய மொழிவழிப் பெருமை காக்கப்படும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

 தமிழர்கள் திராவிடர் அல்லர் என்று தமிழ்நாட்டு மக்கள் கொள்கை முடிவு எடுப்பார்களேயானால, சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று  சொல்லியிருக்கும் ஆய்வுக்கட்டுரைகளைக் காட்டி அவர்கள், தமிழுக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சிந்து வெளி மக்கள் பேசிய மொழி தமிழுக்கு முன்பிருந்த மொழி என்று வெகு தீவிரமாகப் பரப்புரை செய்வர். உலகெங்கும் பரவியுள்ள அறிஞர் பெருமக்கள் நிறுவியுள்ள தமிழ் வரலாற்று உண்மைகளைத் தமிழர்கள் ஒரே நொடியில் இழக்க நேரிடும். 

உண்மை அறிவோம்! தமிழர் திராவிடரே, திராவிடர் என்போர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் உள்ள ஆரியரல்லாத (அதாவது பிராமணரல்லாத) அனைத்து மக்களே. இந்தியா முழுதும் உள்ள பரந்துவிரிந்த நிலப்பரப்பில் ஆரியர் வருகைக்கு முன் பேசப்பெற்ற மொழி தமிழே, அவர்கள் அனைவரும் தமிழரே என்ற வரலாற்று உண்மையை உலகெங்கும் உரைப்போம். சிந்து சமவெளி மக்களின் மொழி தமிழே, தமிழுக்கு முன்மொழி (Proto-Tamil) அல்ல. இந்த வரலாற்று உண்மையை, வரலாற்றுச் சொத்தை நன்முறையில் காப்பாற்றி வைத்து அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுத்துச் செல்வோம்! உலகெங்கும் திராவிடம் என்று வரலாற்றில் அறியப்பெற்றுள்ள தமிழ் வரலாற்றைப் பேணிக்காப்போம். 



மேல் விவங்களுக்கு:


1. Tamil Vs.Sanskrit - Part 2.

 https://vaeyurutholibangan.blogspot.com/2014/08/tamil-vs-sanskrit-part-ii.html


2.Worship of Lord Siva: Exclusively Dravidian!

https://vaeyurutholibangan.blogspot.com/2014/08/worship-of-lord-siva-exclusively.html


3.வாழிய செந்தமிழ்!

https://vaeyurutholibangan.blogspot.com/2014/10/blog-post_90.html


4.மொழி வரலாறு, குழந்தைகளுக்கு !

https://vaeyurutholibangan.blogspot.com/2014/10/blog-post_27.html


5.சிந்துவெளி தீரத்துச் செந்தமிழே !

https://vaeyurutholibangan.blogspot.com/2015/09/blog-post.html


6. திராவிடர், ஆரியர் - சொற்கள் பயன்பாடு - சத்தியப்பெருமாள் பாலுசாமி

https://vaeyurutholibangan.blogspot.com/2015/05/blog-post.html


7.Tamil - Dramila - Dravida

https://vaeyurutholibangan.blogspot.com/2016/10/tamil-dramila-dravida.html


8. திராவிடம்: தாயுமானவர் கையாளும் சொல்! - அரிகரன்

https://vaeyurutholibangan.blogspot.com/2016/08/blog-post.html


9. இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள்: By Jose Kissinger

https://vaeyurutholibangan.blogspot.com/2017/09/blog-post.html 


10.'Dravida' refers to Tamil in Rajatarangini of c. 1128 AD

https://vaeyurutholibangan.blogspot.com/2017/03/dravida-refers-to-tamil-in.html