Thursday, 29 March 2018

என்றும் புகழ இன்றே எழுவீர்!

கேட்டிடு தமிழா வித்தமிழ் நாடுன்    
னின்னுயிர் அதனில் இருந்திடும் வளத்தை
வேட்டையாடும் வெறியுடன் டெல்லிக் 
கோட்டைக் கூட்டம் கொக்கரித் துந்தன்
நாட்டைக்  காட்டை வீட்டை யழிக்க 
நமக்குள ஆற்று நீரை மறுக்கும்!
கேட்டைச் செய்யும் ந்யூட்ரினோ மீத்தேன்
கைல்அணு உலையெனச் சதிபல செய்யும்!

இதன்கரு அறிவீர் ! ஏனையர்க் கறைவீர்!
            இத்தமிழ் நிலத்து வித்தா யெழுவீர் !
பொதுமறை தந்த தமிழனை இன்று
            புலம்பெயர்த் தென்றும் அகதியென் றாக்கச்
சதிசெயுங் கயவர் நடுங்கிட வைப்பீர்!
            சற்றும் அஞ்சீர் ! அற்றங் காப்பீர் !
எதிர்வருங் காலக் குழவிகள் நும்மை
               என்றும் புகழ இன்றே எழுவீர்!

No comments:

Post a Comment