(அறிவுவழிக் காணொலி இயக்கம் ஓராண்டு
இடைவிடாப் பயணம் செய்து அடுத்த ஆண்டிற்குச் செல்வதையொட்டி எழுதப்பெற்று 19.08.2021
அன்று அரங்கேறிய வாழ்த்துப்பா
-வேயுறுதோளிபங்கன்
Emperor Dhana Nandha, the Great!
காலையிளந் தென்றல் வீசக்
கடலினலை தரையைச் சாடச்
சோலையெலாம் பறவைக் கூட்டம்
சுரும்போடின் னிசைநி ரப்ப
வாலையெலா மாட்டி யென்னை
வாவென்ற விலங்கி னத்தால்
காலப்பொறி யைத்தி ருப்பி
கடற்கரையி லிறங்கி
நின்றேன் !
1.
பொற்காலம்
சின்னஞ் சிறியதொரு தீவு
செல்லு மிடமெலாம்நீ ரோடை
தின்னச் சுவைமிகுந்த பழங்கள்
தெங்கு பனையெனப்பல்
மரங்கள்
இன்னும் பலவிருக்க மக்கள்
ஏதும் குறையின்றி
வாழ்ந்தார்
அன்னார் தேவைக்கு மேலே
அவாவிப் பதுக்கலவ ரறியார்.!
2.
கற்காலம்
மீண்டும் காலப்பொறி யேறி
மேலும் ஓர்தீவில் நின்றேன்
தாண்டிச் செல்லவிய லாத
தவிப்புக் குரல்கள் பல
கேட்டேன்
வேண்டு மளவியற்கை தந்தும்
வீணர் அவைதமக்கென் றாக்க
மூண்ட போரொன்று கண்டேன்
முடிவில் வீழ்ந்தன
ரவ்வீணர்! 3.
இயற்கை யன்னையிடம் சென்றேன்
ஏனிக் கலவரங்க ளென்றேன்
செயற்கை யாய்முறுவல் செய்தாள்
சிறுமதிபே ராசையச்ச
மென்றாள்
புயற்காற் றேயென்ற போதும்
புறவாழ்வில் நாகரிகம்
உள்ளோர்,
அயற்கை கண்டஞ்சும் கோழை,
அனைவரையும் கண்டுவரச்
சொன்னாள்.!
4.
(வேறு)
பஃறுளிக் கரைத் தமிழகம்
காலப்பொறி தனிலேறிச் சென்றேன்
கபாடபுரத் தருகினிலே
நின்றேன்
கோலங்கொள் குமுகாய வாழ்வால்
குறள்பிறக்கப் பலநூற்கள் தந்து
ஞாலத்தில் அறத்தாறு கண்டெஞ்
ஞான்றுமகம் புறமிரண்டும்
காத்து
ஆலைப்போ லேபரவி நின்ற
அறத்தமிழர் நிலமதனைக்
கண்டேன்!
5.
(வேறு)
கி. மு. 1500 முதல் கி. மு. 600 வரை
இன்றைய வட இந்தியப் பகுதி
அத்தமிழர் நிலத்தைப் பார்த்த
ஆரியர்கள் நுழைந்து வர்ணக்
கொத்தடிமை முறை புகுத்தி
கொடுமைபல செய்தல் கண்டேன்
!
கி. மு. 600 முதல் கி. மு. 323 வரை
புத்தர்மகா வீரர் கண்டேன்
புரட்டர்களைப் புரட்டல்
கண்டேன்
எத்துணையும் பயனில் வேதத்
தினவெறி*தான் மறைதல் கண்டேன்.!
6.
(வேறு)
தனநந்தன் ஆட்சி கண்டேன்!
தமைக்கடவு ளாகக் காட்டி
மனச்சாட்சி ஏதும் இன்றி
மன்பதையை ஏய்த்த கூட்டம்
மனுநீதி புதைந்த தாலே
மற்றவர்போல் வாழக் கண்டேன்! !1
பனிமுன்னர்க் கதிராய் நந்தன்
பகைவர்முன் நிற்றல்
கண்டேன்!
7.
கி.
மு. 326 - ஜீலம் ஆற்றின் கரை
உலகமெலா மாளும் நோக்கில்
ஒவ்வொருநா டாய்ப்பி டித்து
சிலநாளில் அலெக்சாண் டர்தான்
சீலத்தில் நின்ற காலை,
கலகம்கொலை கொள்ளை செய்யும்
கயவர்படை மட்டும் இன்றி
விலைமகளிர் படைகண் டங்கே
வெறித்தனமாய்ச் சதிகள்
செய்து
8.
மன்னரொடு மக்கள் தம்மை
மட்டின்றிக் கொன்ற ழித்து
இன்னலிலே தனது நாட்டை
இட்டசா ணக்கியன் போய்
இன்னும்கி ழக்கே வந்து
எம்மகதம் தாக்கு என்ன,
அன்னவனைத் தளைசெய் திட்ட
அலெக்சாண்டர் நேர்மை
கண்டேன்!
9.
(வேறு)
கல்வியிற் சிறந்த பாடலி புத்திரம்
கலைகள் வளர்க்க உதவிய
நந்தன்
சொல்பவர் வியக்கக் கேட்பவர் வியர்க்கப்
பல்பரிமாணப் படையதும்
கொண்டான்;
எல்லையில் யவனர் வந்திடு முன்னர்
ஈநுழையாதங் கிருத்தினன் படையை;
வில்லா லம்பெதும் வீசாப் போதே
நில்லா தோடிம
றைந்தனர் யவனர்!
10.
கி. மு. 464 - ஸ்பார்ட்டா
ஹேலாட்கள் அடிமை ஆகக்
கீழோர்கள் என்றும் ஆகி
தாலாட்டுப் பருவந்தொட்டே
தன்மானம் இன்றி வாட
வேலாலும் பின்னர் பெற்ற
வெள்ளறிவா லும் போராடி
மேலேயெ ழுந்து நின்று
மேதினியில் வாழ்தல்
கண்டேன்! 11.
கி. மு. 399 - ஏதென்ஸ்
தெருமுனையில் கூட்டம் கூட்டி
திரண்டுவரும் இளைஞர் தம்மை
உருவினிலே மட்டும்
இன்றி
உள்ளத்தும் மனிதர்
ஆக்க,
செருக்குமிகு ஆட்சியாளர்
‘செடிஷனெ’னக் குற்றஞ் சாட்ட,
கருத்துவிதை செய்த
ஆசான்
கைதனில்யான் கண்டேன் நஞ்சை! 12.
கி. மு. 272 முதல் கி. மு. 232 வரை
எந்தவொரு சமயக் கொள்கை
ஏற்றிங்கு வாழ்ந்திட்
டாலும்
உந்தனது இல்லத் திற்குள்
உன்விருப்பப் படிகொண்
டாடு!
சந்தைவெளி தெருவில் ஊரில்
சமய விழாக் கள்கூடாதென்
றந்தநா ளேய றைந்த
அசோகனையும் கண்டு
வந்தேன்!.
13.
(வேறு)
கி. மு. 185 முதல் கி.பி. 550 வரை
அதிகாரத் தில்லரசர்க் கருகிருந்த சுங்கன்
அசோகன்வழித் தோன்றலினைக் கொலைசெய்த காலம்,
சதுர்வர்ண வெறியாளர் சமணமுனி யோடு
சாக்கிய பிக்கினையெல்லாம் சாய்த்திட்ட காலம்,
விதியெல்லா மாரியர்க்குச் சாதகமாய் மாற்றி
விஷக்கருத்து பலவற்றை இலக்கியத்தி லேற்றி
இதுவேநம் பொற்காலம் எனஏய்க்கும் கூட்டம்
களிகொள்ளும் குப்தர்களின் காலமதும் கண்டேன்
! 14.
(வேறு)
தொன்று தொட்ட தாயகக் கொள்கை
(Traditional
Homeland Concept)
இந்திய நாட்டில் இன்று எந்தமிழர் தெலுங்கர்
கன்னடர் மலையாளத்தார்
துளுவர் மராட்டியர்கள்
விந்தியத் தொரியரோடு வங்க குஜராத்தியர்கள்
அஸ்ஸாமி மணிப்புரியர்
ஐயாற்றுப் பஞ்சாபியர்
முந்தியக் காலந்தோட்டே முடிசூடி வாழ்ந்தாரிங்கே!
அத்தனை பேர்க்குமன்னார்
நிலமுண்டு; வரலாறுண்டு!
பிந்திய காலத்தில்வீண் பெருமைக்கு உருவம்தந்து
வடித்தவா ரியமொழிக்கு
நிலமிலை; மக்க ளில்லை! 15.
(வேறு)
இருப்பினும் அதிகாரத்தைக் கவர்ந்ததால் காவிக்கூட்டம்
கருப்பினை
வெளுப்பாய்க்காட்டி, கதைகளை
வரலாறாக்கி,
பொருப்பினை மடுவாய்க்காட்டி, புல்லரை இறையாய்க் காட்டி
புரட்டுசெய் கலைகள்தம்மில்
புதுப்புது எல்லைகண்டு
இருட்டிலே உண்மை தள்ளி, உயர்வா யாரியத்தைக் காட்டும்!
விருப்பிலாபோதும் சைவக்
கோயில்பூ சகரென்றாகி
உருக்கிடும் தமிழைநீக்க ஒவ்வொரு சதியாய்ச் செய்யும்!
மிரட்டியே அரசர் மூலம்
நிலம்வளம் பலசுருட்டும்! 16.
(வேறு)
இத்தனை மட்டுமல்ல
இனும்பல காண லானேன்!
மத்திய ஆசியாவின்
மைந்தரம் மண்ணை விட்டு
நித்தம்கால் நடைவிரட்டி
ஏழ்திசை ஏகக் கண்டேன்!
இத்திசை வந்தார்தம்மண்
மறைத்திடக் கண்ட யர்ந்தேன்! 17.
(வேறு)
எத்திசையில் சென்றவரும்
இத்திசைசேர் ஆரியர்போல்
இனக்கொலையைத் தொடர்ந்துசெய வில்லை;
இத்தரையின் மைந்தர்களை
இனவெறிக்கொள் கைகொண்டு
இழிபிறப்பார்
என்றுரைக்க வில்லை;
இத்தோடு இன்றோடு
இங்குஅவர் இழைத்துவரும்
சதி,கொடுமை நீங்கிவிட வேண்டும்;
மத்தியில்மே லதிகார
மையத்தில் இம்மண்ணின்
மைந்தர்முழு
உரிமைபெறல் வேண்டும்! 18.
அத்திசையை நோக்கித்தான்
பிராமணரல் லாதபிறர்
அணிசேர்ந்து பயணிக்க
வேண்டும்!
முத்தமிழால் இறைவணங்கும்
கோயில்வட மொழியாரின்
கொடும்பிடியி
லிருந்தகல வேண்டும்!
இத்தரையில் இப்பிறவி
இச்செயலுக்
காயிலையேல்
வாழ்தலினி
தென்னாரெந் தமிழர்!
கத்திகழு பெகசுஸ்எமைக்
கலக்காவே, கணியன் சொலால்!
கண்டேன்பொ
றிதிருப்பி வந்தேன்! 19.
(வேறு)
பரணி
இனம்வி ழித்தது! இந்தெனும்
திரை கிழித்துபி ராமணப்
புனைசு ருட்டெலா முலகினர்
புரிய வைக்கவை நாவிலே
அனல்ப றத்திய கண்டனம்
அனைவ ரும்பதி வாக்கவும்
மனம்வெ தும்பிய ஆரியர்
மாற, வென்றது மானுடம்! 20.
(வேறு)
வாழி
அடுத்தவர் ஆருமில்; அனைவரும்
உறவினர்;
என்றதெந்
தமிழர் நெறி!
அடுத்தவர் எதிரிகள்; பிறப்பினில்
இழிந்தவர்
என்றதா ரியத்தின் வெறி!
தொடுத்தவா ரியச்சம ரினிலவர் சதிகளால்
சாதிக ளாலே பறித்
தெடுத்தவை மீட்பதே ‘அறிவுவழிக் காணொலி
இயக்க’த்து முதன்மைக் குறி! 21.
அந்தத் திசைதனில் ஆறிரு திங்களாய்
அயராது பயணம் செய்து
இந்தியம் தாண்டி அமெரிக் காவரை
எழுச்சிக் குரல் ஒலிக்கத்
தந்ததோர் சேரலா தனாரொடு தாமோ
தரனார், மோகன் ராசர்,
உந்து விசைதந்த நண்பர்கள் தம்மொடு
ஊழி வரையும் வாழி! 22.
(நிறைவு)
பாடற்குறிப்புகள்:
1. காலப்பொறி – Time
Machine.
2. தேவைக்கு மேலே அவாவிப் பதுக்கல்
-“There is enough on this planet for
everyone’s need but not for everyone’s greed”, said Mahatma Gandhi. “Greed is
the lack of confidence of one’ s own ability to create” said Vanna Bonta, the
author of ‘Fight: A Quantum Fiction Novel’.
4. செயற்கையாய்ப்
புன்முறுவல் – Mother Nature was not happy with the agressors and their
greed. She was sad. She greeted
me with a smile which was an artificial and forced one.
சிறுமதிபே ராசையச்ச மென்றாள் - சிறுமதி பேராசை அச்சம் – சிறுமதி - Petty mindedness (born
out of absence of real education, self-centeredness, absence of broad-mind and egalitarian outlook) and greed (பேராசை) on
the part of Oppressors. Unwanted fear (அச்சம்) in the minds of the Oppressed.
புயற்காற் றேயென்ற போதும் புறவாழ்வில் நாகரிகம் உள்ளோர் - ஊழி பெயரினும் தான் பெயரார் சான்றாண்மைக்
காழி எனப்படுவார்.
அயற்கை –
பகைவர்கள்
5. அறத்தாறு –
அறவழி;
கண்டெஞ் ஞான்றுமகம் புறமிரண்டும் – கண்டு எஞ்சான்றும் அகம் புறம் இரண்டும்.
6. எத்துணையும் –
எள் அளவுக்குக்கூட.
வேதத்தினவெறி – வேதத்து இனவெறி – வேதத்திலேயே
குறிப்பிடப்பட்டுள்ள இனவெறி : “Apartheid” that originated from the
texts of Vedas themselves. Chaturvarna was a later concept invented and
developed by the Aryans after they subjugated the natives. But, the Aryans got
inserted the Chaturvarna concept - “Chaturvarnam maya shrishtam” - in the Rig
Veda itself to project that it was of ancient origin. “The Brahmin was his
mouth, Of both his arms was the (Kshatriya) made. His thighs became the
Vaishya, From his feet the Sudra was produced. (Rig Veda X.90.1-3)” Such
interpolations were possible, for them, only because they retained the control
over the access of people to knowledge. If the non-Brahmins had also read those
Vedas during that period, no such interpolations would have been possible. Nor
would the Aryans have been able to create any halo around those Vedas which had
been called as ‘low-art’ by Lord Buddha.
7. தனநந்தன் ஆட்சி - சிறந்த ஆட்சி: “Pataliputra held a pre-eminent position
in the literary life of the nation during the Nanda and
Maurya periods” ...................Panini visited the city
because of his “friendship with one of the Nanda kings”. (Page 20 - – India as
known to Panini – V.S.Agrawala – 1953 – University of Lucknow publication).
8. சீலம் - ஜீலம். Jhelum river.
கலகம்கொலை கொள்ளை செய்யும்
கயவர்படை - Chanakya’s bonhomie with robbers, outlaws, knaves, thieves and
organized gangs and recruiting them for the personal army of Chandra Gupta are
referred to in Page 22 of the book ‘Chandragupta Maurya and his times’ by Radha
Kumud Mukherji. – 4th Edition – 1966.
விலைமகளிர் படை - “Keepers of harlots
or dancers, players, and actors may, after gaining access, excite love in the
minds of the chiefs of corporations by exhibiting women endowed with bewitching
youth and beauty. By causing the woman to go to another person or by pretending
that another person has violently carried her off, they may bring about quarrel
among those who love that woman; in the ensuing affray, fiery spies may do
their work and declare: “Thus has he been killed in consequence of his love.”-
(Arthasasthra - Book XI - Chapter I – Page 415 - Causes of Dissension: And,
Secret Punishment.)
9. அலெக்சாண்டர் நேர்மை
கண்டேன் :
“In 326-325, we see
Chandragupta, hitherto an obscure figure, coming into the limelight. The occasion
was his meeting with Alexander in the Punjab which is referred to by both
Justin and Plutarch. The young Chandragupta seems to have approached Alexander
with a request for help to overthrow the much-detested Nanda rule. Details of
what transpired at the meeting are not recorded but Justin tells us that young
Chandragupta’s manners and the tone of his appeal offended Alexander who
ordered his death”. (Page 30 - Indian History and Civilisation - Vol. I -
Macmillan India Limited - 1989).
10. கல்வியிற் சிறந்த பாடலி
புத்திரம் கலைகள் வளர்க்க உதவிய நந்தன் – Dhana
Nandan patronised arts, culture and valour. He organised annual meets to
evaluate the ideas propounded by scholars and conferred various benefits on those
whose theories were accepted. This practice was continued in the period of
Chandra Gupta Maurya also. More of it one can
read in Page 20 of the book, India as known to Panini by V.S.Agrawala, 1953, University of Lucknow publication.
“Magadhan
princes were conquerors and statesmen who laid stress on parakrama (Valour) and
strove to achieve the ideal of chakravarthi (Emperor)” - Page
20 - Indian History of Civilisation - Vol. I - 1989 – Macmillan.
பல்பரிமாணப் படை: Evidences
are aplenty that Nandas emitted fear in Macedonians’ mind. "According
to Curtius, the imperial army of Nandas included 2,00,000 infantry, 20,000
cavalry, 2,000 four-horsed war chariots and 3000 elephants, and the Macedonian
soldiers lost their nerves to hear of it as they reached the Beas" - Page
299 - History of Ancient India - J.L. Mehta & Sarita Mehta-Lotus Press, New
Delhi.
Very few of the
original army survived. Alexander … “was informed that the king of the Prasii
(Magadha) was waiting to offer him resistance with an army of 80,000 horse,
200,000 foot, 8000 war chariots and 6000 fighting elephants”. (P 56 & 57-
the Concept of Equity in Sukraniti and Arthasasthra - T.R. Shama).
Alexander “never
approached even within a measurable distance of what may be called the citadel
of Indian military strength, and the exertions he had to make against Poros,
the ruler of a small district between the Jhelum and the Chenab, do not
certainly favor the hypothesis that he would have found it an easy task to
subdue the mighty Nanda empire." – R.C. Majumdar.
"The historians
of Alexander speak of the most powerful peoples who dwelt beyond the Beas as
being under one sovereign" (Page 16 - The Age of the Nandas and Mauryas -
H.C. Raychaudhuri - Edited by K. A. Nilakanta Sastri – Bharatiya Ithihas
Parishad – 1952).
“The Nanda army was a powerful fighting
machine and we are told by classical writers that the last king of the line
‘kept in the field for guarding the approaches of his country, twenty thousand
cavalry, and two hundred thousand infantry, besides two thousand four-horsed
chariots, and, what was the most formidable force of all, a troop of elephants
which ran up to the number of three thousand. Diodorus and Plutarch raise the
number of elephants to four thousand and six thousand respectively. The latter
puts the strength of the army of the Gangetic nations at eighty thousand horse,
two hundred thousand foot, eight thousand war chariots, besides six thousand
fighting elephants.”. (Page 15 & 16 –ibid).
With a lot of
reluctance, Alexander’s engineer Coenus
explained to Alexander the unwillingness of the rank and file in the army. He
said , “Sire, we know that you have never wished to lead us like a dictator,
but you say you lead us by persuasion, and if we convince you to the contrary
you will not use coercion, so then I shall speak not on behalf of the officers
present here, but for the rank and file … With you as our leader we have
achieved so many marvellous successes, but isn’t it time now to set some limit?
Surely, you can see yourself how few are left of the original army which began
this enterprise … some died in the battle, others were invalided out with
wounds, many left behind in different parts of Asia; but most have died of
sickness, and so of all that great army only a few survive, and even they no
longer enjoy the health they had - while their spirit is simply worn out. One
and all they long to see their parents, if they are still alive, their wives
and children, and their homeland … Sire, the sign of great man is knowing when
to stop”. -Page 183 - Alexander
the Great – Michael Wood.
12. கருத்துவிதை செய்த – கருத்து விதைத்த; ஆசான் – சாக்ரடீஸ்
14. அதிகாரத் தில்லரசர்க் கருகிருந்த சுங்கன் – அதிகாரத்தில் அரசருக்கு அருகில்
இருந்த சுங்கன் – Pushyamithra
Sunga abused his position using his status as military chief which had been
conferred on him because of the trust reposed in him by Brihatrada Maurya, the
grandson of Asoka. Importance of top-level posts can be understood from such
episodes.
An image of the contents in Page 174 of the Book 'Jainism in North India 800 BC -AD 526' by Chimanlal J .Shah with a foreword by Rev. H. Heras, published by Longman, Green and Co, in the year 1932, has been given alongwith the image of Pushyamithra Sunga below the poem No. 14.
15. அத்தனை பேர்க்குமன்னார்
நிலமுண்டு: அன்னார் நிலம் – அவர்களுடைய தோன்றுதொட்ட தாயகம். Their traditional
homeland.
பிந்திய காலத்தில்வீண்
பெருமைக்கு உருவம்தந்து வடித்தவா ரியமொழிக்கு – சமஸ்கிருதம் உருவாக்கப் பட்டது பற்றிய மேல் விவரங்களுக்கு Tamil Vs.
Sanskrit Part II என்ற கட்டுரையைப் படிக்கவும்: ( http://vaeyurutholibangan.blogspot.com/2014/08/tamil-vs-sanskrit-part-ii.html )
The
concept of traditional homeland has been admitted by the Government of India in
the Gazette Notification dated 20.11.2014 issued by the Ministry of Home
Affairs in S.O. 2946 €. The argument of the Advocate for the Government of
Tamil Nadu in June 2014 that “The
State of Tamil Nadu has traditionally been considered to be homeland of
Tamils…” had been accepted and recorded by the judiciary and the final decision
was taken on that basis of that ground only.
16. உயர்வா
யாரியத்தை
– உயர்வாக ஆரியத்தை
17. The word ‘Aryan’ is repeatedly in Vedas, Smritis and
Arthasastra and also by Hitler and Sinhalese. The words ‘Aryan’ and ‘Brahmin’ (Brahman)
are used interchangeably in Arthasastra. Literary, linguistic, religious and
archaeological evidences clearly testify to the fact that the Aryans were invaders.
This fact had been established long back in 1924 itself by Fr. Henry Heras. More
on it can be read in the article titled, சிந்துவெளி தீரத்துச் செந்தமிழே!, available in the link, https://vaeyurutholibangan.blogspot.com/2015/09/blog-post.html
Please also visit,
https://scroll.in/article/936872/two-new-genetic-studies-upheld-aryan-migration-theory-so-why-did-indian-media-report-the-opposite
18. இனக்கொலை – Genocide, which includes Linguicide also.
இனவெறிக்கொள் கைகொண்டு - இனவெறிக்கொள்கை (Policy of apartheid) கொண்டு.
முழு உரிமை – Cent per cent share in top-level power centres including
higher judiciary to the extent of their ratio in the population.
There are two categories
of genocide - War time genocide and peace time genocide. Apartheid is
recognised as a war crime.
In 1977, Addition
Protocol 1 to the Geneva Conventions designated apartheid as a grave
breach of the Protocol and a war crime. There are 169 parties to the
Protocol. ... The International Criminal Court (ICC) came into being on 1 July
2002, and can prosecute crimes committed on or after that date. In India, the apartheidistic crimes are committed every day till
date. Art. 25 and 26 permit Varna differentiation in the guise of religion.
Brahmins are the beneficiaries of this apartheidistic policy here.
Caste system is
peace time genocide. Apartheid results in denial of civil rights with
consequential effect in all spheres.
Apartheid refers
to the implementation and maintenance of a system of legalized racial
segregation in which one racial group is deprived of political and civil rights.
Apartheid is a crime against humanity punishable under the Rome Statute of the
International Criminal Court.
To put it rightly
and simply, the Chaturvarna system is a racial crime.
Exploitation of one
by another started first among the same group of people. Such exploitation was and is there in
many societies. Some civilised nations, like the Scandinavian ones, have addressed this problem effectively. But
the Varna system invented by Brahmins is exploitation of one race by another
race. It is a racial crime which is continued to be committed till date.
19.
கோயில்வட
மொழியாரின் கொடும்பிடியி லிருந்தகல – ஆரியாகள் மட்டும் பூசகர்களாகப் பணியாற்றும் கோயில்களில், தமிழில்
வழிபாடு செய்வதோடு தமிழர்களும் அனைத்து நிலைகளிலும் பூசகர்களாகப் பணியாற்றல்
வேண்டும்.
இச்செயலுக் காயிலையேல் வாழ்தலினி
தென்னாரெந் தமிழர் –
இந்த செயலுக்காக அவரால் வாழ்க்கை பயன்படுத்தப் பெறாவிட்டால் தமது வாழ்க்கை இனியது என்றோ
பயனுள்ளது என்றோ தமிழர்கள் கருத
மாட்டார்கள்.
கத்திகழு பெகசுஸ்எமைக் கலக்காவே கணியன் சொலால் – தமிழர்கள் ஆரியர்களால் கத்தி, கழுமரங்கள் ஆகியவற்றைக் கண்டவர்கள்.
தற்போது சாணக்கியன் காலத்தைப் போல, உள்நாட்டு மக்களை Pegasus அல்லது அதுபோன்ற மென்பொருள்களைக்கொண்டு உளவுபார்க்கும் வேலையில்
இறங்கி உள்ளனர். ஆனால் இவைகளால் தமிழர்களைக் கலங்கடிக்க முடியாது. கணியன் பூங்குன்றனார் சொல்லிச் சென்றுள்ளார், “சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!” என்று. வாழ்வியலின் உண்மையும் ஆரியச் சூழ்ச்சிகளின் தன்மையும் அறிந்தவர்கள் தமிழர்கள்.
ஆரியச் சூழ்ச்சியை எதிர்த்துப் போராடி வெல்வர்.
20. இந்தெனும் திரை கிழித்து
– இந்து ஒற்றுமை என்ற
திரையைப் போட்டு மறைத்துக் கொண்டு அந்தத் திரைக்குப் பின்னால், நாங்கள்
பிராமணர்கள் எங்களைத் தவிர மற்ற அனைவரும் இழிபிறவியினர் (kul -heena)
என்று கூறி பிராமணர் அல்லாதாரைத் இகழ்ந்து வருவது மட்டுமின்றி அந்த இனவெறிக் கூற்றினை (Policy of Apartheid) அறங்கூறாயத்திலும் சென்று நியாயப் படுத்தும், பிராமனர்களின் செயல்பாட்டை
உலகுக்குப் புரிய வைக்க The Doctrine of Lifting the Veil என்ற
கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.
புரிய வைக்கவை நாவிலே – புரிய வைக்க ஐ. நா. விலே
Brahminism is anti-humanitarian, always and
everywhere! It is the most
inhuman apartheidistic concept ever encountered by mankind. We need reparations
and Non-Racial Democracy. The UNO says
that is is a “Partner in the Struggle against Apartheid”. On 04.12.1989 “The General Assembly adopted
by consensus the “Declaration on Apartheid and its Destructive Consequences in
Southern Africa,” calling for negotiations to end apartheid and establish a
non-racial democracy (Resolution A/RES/S-16/1)”.
“The elimination of South Africa’s system of legalized racial
discrimination known as apartheid (“apart-ness” in the Afrikaans language
of the descendants of the first Dutch settlers) was on the agenda of the United
Nations from its inception. On 22 June 1946, the Indian government requested
that the discriminatory treatment of Indians in the Union of South Africa be
included on the agenda of the very first session of the General Assembly.” (https://southafrica.un.org/en/about/about-the-un )
“The UN
human rights complaint process is a last resort. All local and national
remedies must be exhausted before filing with the UN.” (https://ask.un.org/faq/14425)
21.
தொடுத்தவா
ரியச்சம ரினிலவர் சதிகளால் சாதிக ளாலே – தொடுத்த ஆரியச் சமரினில் அவர்கள் சதிகளாலும் சாதிகளாலும் .