Sunday, 30 January 2022

வேதங்கள் பொய்யானவைதாம் என்று நிரூபித்து வரும் பிராமணர்கள் !

 

"Vedas are a worthless set of books", said Ambedkar. வேதங்கள் பொய்யானவைதாம் என்று பிராமணர்கள் காலங்காலமாக நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள்.

பூசகர் பணியில் பிராமணரல்லாதோரின் உரிமையை மறுப்பதற்கு ( ஒன்றுக்கும் பயனிலாத, சூதான, கரவெண்ணங்கொண்ட சிந்தனைகளின் வடிவமான) வேதப் புத்தகங்களைக்காட்டும் பிராமணர்கள், தங்களுடைய அபிலாஷைகளுக்கு வேதங்கள் தடையாயிருக்குமென்றால், அனைத்து வேத, வேதாந்தப் புத்தகங்களையும், அனைத்து பிராமணீய விதிகளையும். மூட்டைகட்டி ஒரு ஓரத்தில் கடாசிவிட்டு, காசுபண்ணச் செல்வதை வாடிக்கையாக்கி வைத்திருக்கின்றனர்.
பசு மாமிசத்தை, அதுவும் பசுவின் கன்றின் மாமிசத்தை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூக்கைப்பிடிக்கத் தின்று கொண்டிருந்தார்கள் பிராமணர்கள். அவ்வாறு தின்பது புண்ணியம் என்று வேறு தங்களுக்குத் தாங்களே கூறிக்கொண்டனர். திடீரென்று பசுமாமிசம் சாப்பிடக்கூடாது என்று பரப்புரை செய்யலாயினர். எந்தத் தேதியில் திடீரென்று ஞானோதயம் வந்து , வேதத்தில் உள்ளதைப் புறக்கணிக்கத் தீர்மானித்தனர், யார் அந்த முடிவை எடுத்தார், என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடைகூற மறுக்கின்றனர். அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
பிராமண விதவைப்பெண்களைத் தலையை மொட்டையடித்து அன்று உட்காரவைத்தனர். . அது சாஸ்திரம் என்றார்கள். இன்று அதை விட்டுவிட்டனர். அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
1889 ஆம் ஆண்டு. 11 வயதுப் பெண்குழந்தை ஒன்று அதன் 35 வயதுக் கணவனால் உடலுறவின்போது இறந்துபட்டது. துணைக்கண்டம் முழுதும் கொதித்தெழுந்தது. குழந்தைத்திருமணத் தடைச் சட்டம் கொணரக் கோரிக்கைகள் எழுந்தன. அன்றைய பிரிட்டிஷ் அரசு உடலுறவுக்கான வயதை 12 க்கு உயர்த்தியது (Age of Consent Act, 1891). சனாதன வெறியரான திலகர் இது சாத்தரத்திற்குப் புறம்பானது என்றுகூறி முட்டாள்தனமாக எதிர்த்தார். “The common rule is for intercourse to take place on that very night when ( a girl ) has the first menstruation after having performed the homa sacrifice. This custom has been practiced for at least two thousand five hundred years since the ancient era of Sutras. If you want the Shastra, then this is the true way” (Kesari, 17.02.1891). இன்று யாரும் அந்த சாத்திரங்கள் புனிதமானவை என்று சொல்லவில்லை. அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
கடல்தாண்டிச் சென்றுவிட்டால் பிராமணன் தனது ஜாதியை இழந்துவிடுகிறான் என்று கூறி, தாங்கள் கடல்தாண்டிச் செல்வதைக் காலங்காலமாகத் தவிர்த்து வந்தனர் பிராமணர்கள். ஆனால் திடீரென்று, கடல்தாண்டிச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டது மட்டுமின்றி, அவர்கள் சென்ற அயல்நாடுகளில், கோயில்கள் கட்டிக்கொள்வதும், அவற்றில் பூசகர்களாகப் பணியாற்றவும் முற்பட்டனர். அத்துடன், கடல்தாண்டுவதால் ஏற்படும் ஜாதி இழப்பைப் பற்றி அவர்கள் கவலை ஏதும் கொள்ளவில்லை. ஏனெனில் , அவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்யும் வழக்கத்தை இங்குள்ள பிற பிராமணர்கள் கைவிட்டுவிட்டனர். கடல்தாண்டிச் சென்றால் ஜாதிப்பிரஷ்டம் ஆகிவிடும் என்று அவர்கள் உருவாக்கிவைத்திருந்த கொள்கை மிகத்தீவிரமாகக் காலங்காலமாக அவர்களால் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், எந்தத் தேதியில் அந்தக் கொள்கை திடீரென்று கைவிடப்பட்டது, யார் அந்த முடிவை எடுத்தார், என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கூற மறுக்கிறார்கள். அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
வேதங்களின் அடிப்படையை என்றும் மதிப்பவர்கள் பிராமணர்கள் என்றால், புற்றீசல் போல உலகெங்கும் இவர்கள் சுவாமிநாராயன் கோயில்களைக் கட்டியிருக்கவே முடியாது. அப்படிக் கடல்தாண்டிக் கட்டியபின் அங்கு போய் பிராமணன் என்ற ‘அந்தஸ்தை’ நிலைநிறுத்திக்கொண்டு பூசகர் வேலை செய்யவும் முடியாது.
அஃதன்றி, இங்கு இந்தியாவில் இருக்கும் கடல்தாண்டா பிராமணர்களாவது வேதங்களையும் வேதாந்தங்களையும் மதிக்கிறார்களா என்றால், இல்லை என்றே அவர்கள் நடவடிக்கை தெரிவிக்கிறது. இங்குள்ள கடல்தாண்டா பிராமணர்கள், பிற கடல்தாண்டிய பிராமணர்களை, ஜாதிப்பிரஷ்டம் செய்து அவர்கள் பிராமணர்கள் அல்லர் என்று அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு இவர்கள் தற்காலத்தில் செய்வதில்லை.
இவற்றால் விளங்கும் (அ)நீதி யாது?
வேதங்கள் பொய்யானவை என்பதை பிராமணர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அவற்றை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேட வேண்டும் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளது. எனவே, வேதங்களைப் புனிதம் என்றெல்லாம் அவர்கள் ஒன்றும் மதிப்பதில்லை. “Vedas are a worthless set of books” என்று அறிஞர் அம்பேத்கர் சொன்னார். தங்கள் கருத்தும் அதுவேதான் என்று பிராமணர்கள் அவர்களின் நடைமுறை வாழ்க்கையால் உலகுக்குத் தினந்தினம் தெளிவாக்கிக் கொண்டுள்ளனர். தங்களுடைய வசதிக்கும் வருமானத்திற்கும் சாதகமாக இருக்குமென்றால் வேதமுறைகளைப் பயன்படுத்திக்கொள்வர். அவை இவர்களுடைய வாழ்வியல் ஆசைகளுக்குத் தடையாக இருக்கவேண்டுமென்றால் ஓசையில்லாமல் புதைத்து மூடிவிடுவர்.
கி.பி. 1773 ஆகஸ்ட் மாதத்தில் இரகோபா என்று அழைக்கப்பட்ட இரகுநாத ராவ் மராத்திய நாட்டின் ஆறாவது பேஷ்வாவாகப் பணியேற்கிறார். அவருக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. இவர் பின்னாளில் எட்டாவது பேஷ்வாவாக வந்த பாஜிராவின் தகப்பனார் ஆவார். இவர் இரண்டு பிராமணர்களை தனது தூதர்களாக லண்டனுக்கு அனுப்பி தன்னை பிரிட்டிஷ் அரசு பேஷ்வாவாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோருகிறார்.
அவர்கள் திரும்பிவந்ததும், அவர்களுடைய பிராமணர் சமூகம் அவர்களை வழக்கம்போல சாதிப்பிரஷ்டம் செய்கிறது. ஏனெனில், கி.பி. 1624ல் சிவாஜி ஆட்சிக்கு வந்தபின் மனுநீதிப்படித்தான் ஆட்சி நடத்தப்பட்டது. சிலருக்கு பௌதாயன சூத்திரத்தின் படி மூன்று ஆண்டுகளுக்குத் தண்டனை அனுபவித்துப் பிராயச்சித்தம் செய்தால் ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவ்வாறு அந்த இரண்டு பிராமணர்களையும் தண்டனைக்கு ஆட்படுத்த பேஷ்வா ரகோபா தயாராக இல்லை. எனவே, பேஷவாவின்அழுத்தத்தின் பேரில் அந்த பிராமண சமூகம் ஒரு புதிய வழியை பிராயச்சித்தம் செய்வதற்குக் கண்டுபிடித்தது.
அதன்படி, தங்கத்தில் ஒரு பெரிய பெண்ணுறுப்பு செய்யப்பட்டு அதன் மூலமாக ஒரு பக்கத்திலிருந்து புகுந்து மற்றொரு பக்கத்திற்கு வருமாறு , கடல்தாண்டிச் சென்ற இரு பிராமணர்களும் பணிக்கப்பட்டனர். அவர்கள் அவ்வாறு புகுந்து வந்தபின் ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு பிராமணர்களாக மீண்டும் ஏற்கப்பட்டனர். அதன்பின் அந்தத் தங்கப் பெண்ணுறுப்பு சிறுசிறு துண்டுகளாகத் துணிக்கப்பட்டு, பிற பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. ஹிரண்யகர்ப தானம் முதலான பல நிகழ்வுகளைக் காணும்போது , இவ்வகையான நிகழ்வுகள் புதிதல்ல என்பதும், காசுக்காக எல்லா சாத்திரங்களும் வளைக்கப்படும் என்பதும், அவை புனிதமானவை அல்ல என்பதும் தெளிவாகும். எனவே, எந்த சாத்திரத்தையும் காட்டி பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பூசகர் உரிமையை மறுக்க முடியாது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்துக் கோயில்களில், பிராமணர்கள் மட்டுமே பூசகர்களாகப் பணியாற்றும் அனைத்துக்கோயில்களிலும், அனைத்து சாதிப் பிராமணரல்லாதோரும் பூசகர்களாக அனைத்து நிலைகளிலும் பணியாற்ற வகை செய்ய வேண்டும்
It was August 1773. Raghunath Rao @ Ragoba assumes power as Peshwa. “Ragoba lost no time in proclaiming himself the Peshwa in succession to the murdered Narayanrao” (Page 287 - How India lost her Freedom – Pandit Sandarlal – SAGE Publishing). He did not have the support of the locals and, therefore, depended on the help of East India Company. “Rughonath Rao, sixth Peishwa, plays an important part in the after relations of the English with the Mahrattas. He is frequently mentioned in the records of the eighteenth century under the name of Ragoba, but Rughonath Rao is his correct name. He was the father of Baji Rao, the eighth Peishwa and last of the dynasty, who was dethroned in 1818” (Page 418 & 419 – India and the Frontier States of Afganisthan, Nipal and Burma – Vol. I – J. Talboys Wheeler ).
This Ragoba sent two Brahmins as ambassadors to England to seek support for his Peshwaship. When they returned, they were not accepted by their community as Brahmins, as they were deemed to have lost their caste / varna –status. They were ostracized straightaway. After all, it was Manusmiriti that was rooling the roost in the Maratha empire, ever since Shivaji Maharaj came to power in 1624 AD. And, Manu had said those who undertook voyages by sea should be avoided by others. (Chapter III. Verse 158). Baudayana Sutra (II.1.2.2) also condemned sea voyage as an ‘offence’ and imposed the penalty of loss of caste. It mandated a cooling-off period of three years. During this period, those who committed the offence of “making voyages by sea”, “shall eat every fourth meal-time a little food, bathe at the time of the three libations (morning, noon, and evening), passing (the day) standing and (the night) sitting. After the lapse of three years they throw off their guilt” (II.1.2.10).
Ragoba, the Peshwa, was, however, not prepared to accept this kind of penalty for his Brahmin ambassadors. He could not afford to leave his ambassadors in the lurch. He pressurized the priests for a solution. After all, public money in the treasury was at his disposal then. So, the priests thought over the issues and came out with a way out, praayaschit (repentence). And, that was totally novel and entirely different from the one prescribed in the Baudayana Sutra.
“The famous Brahman Ragoba, the father of the last of the Mahrataa Peshwas....sent two Brahman ambassadors to England. On their return, they required purification from having passed through, and lived in, debasing countries. They were regenerated by a transit through a golden yoni, made expressly for the purpose – and of course with other presents to an immense amount, given to the Brahmans”. (Page 506 – Oriental Fragments – Edward Moor – 1834). “...two Brahmins, whom he (Ragoba) sent as ambassadors to England, were, on their return to Hindostan, compelled to pass through the sacred yoni, or female lingam, made of the finest gold. After performing this ordeal, and making valuable presents to the Brahmins, they were restored to the privileges of their caste, which they had lost, by the impurities contracted in travelling through so many polluted countries. The celebrated Sevajee (Shivaji), in the seventeenth century, on the day when he assumed the Mahratta sovereignty, was publicly weighed against gold; his weight was equal to that of sixteen thousand pagodas; which, with a hundred thousand more, were distributed among the Brahmins” (Page 240 – Oriental Memoirs – Vol.I – James Forbes – Second Edition – 1834. First Edition probably in 1810, as could be discerned from Page viii narrating the biographical sketch of the author). Refer also to the book titled, “Works relating to India” published by Wm. H. Allen and Co, 7, Leadenhall Street, London in October 1814.

No comments:

Post a Comment