இன்னோசைகள்
உள்ளத்திற்கு
இன்பம்
பயப்பன.
அந்த
இன்னோசைகளை
மெலித்தல், வலித்தல், நீட்டல்
(Elongation), குறுக்கல் ஆகிய
வழிகளைக்
கைக்கொண்டு
உருவாக்கி, முறைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கும்போது, அவை
முறையான
இசையாகின்றன.
அவ்வறான
முறைப்படுத்தப்பட்ட
இசையை
மாந்தனின்
வரலாற்றில்
முதன்முறையாக
உருவாக்கியது
தமிழ்க்
குமுகாயமே.
அவ்வாறான
இசை
வாய்மூலமானதாக
மட்டுமின்றி, பலவித
இன்னோசை
தரும்
இசைக்கருவிகளாலும்
உருவாக்கப்பட்டு
வாய்ப்பாட்டிற்கு
உதவும்
வகையில்
ஒருங்கிணைக்கப்பட்டன.
இவ்வாறான
இசையுடன்
தோன்றியதே
ஆடற்கலை.
மனிதன்
ஆடுவது
என்பது,
தாள் எனும் காலடிகளால்.
ஆடும்
விதத்தை, தாள்
வைக்கப்படும்
விதங்களை
முறைப்படுத்தி, தாளம்
என்று
வகைப்படுத்தினர்
தமிழர்கள்.
தாளத்திற்கேற்பத்தான்
பாட்டுக்கட்டலாயினர்.
அந்த
நிலையில்
உருவானதே
முத்தமிழில்
இரண்டாம்
தமிழான
இசைத்தமிழ்.
காலங்காலமாக இசைத்தமிழை
உருகி உருகி வளர்த்தவர்கள்
தமிழர்கள். அவர்கள் உருவாக்கிய எண்ணற்ற இசைக்கருவிகளில் குழலும் யாழும் மிகமிகத் தலையாயவை. அதனாற்றான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, திருக்குறளில் இந்த இரண்டு இசைக்கருவிகளின் முகாமைத்துவத்தை, வள்ளுவர் 'குழலினிது யழினிது என்ப' என்று பதிவுசெய்துள்ளார். அவர் காலத்திலேயே முறைப்படுத்தப்பெற்ற இசைத்தமிழின் வளர்ச்சி அவ்வளவு இருந்திருக்கிறது என்றால், அந்த இசைத்தமிழ் தோன்றிய காலமும் அது வளர்ந்த காலமும் எவ்வளவு ஆண்டுகள் என்பது கற்பனைக்கு எட்டாததே.
அவ்வாறு இசை வளர்த்து, இசையில் விற்பன்னர்களாகத் தமிழர்கள் திகழ்ந்து வந்தனர். "பாணர், பாடினியர், விறலியர் போன்றோர் பண்ணும் தாளமும்
கூடிய இசைப்பாடல்களைப்
பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக்
கருவிகள் துணையோடு
சிறப்பாகப் பாடி
உள்ளனர்." குழல், யாழ், கின்னரம்.
வாங்கியம், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான
பல்வித இசைக்கருவிகள்
இருந்துள்ளன.தொல்காப்பியம்
பொருளதிகாரம் அகத்திணையில்
18 ஆம் பாடல் தமிழ்நெறியின்
பண்பாட்டுக் கருப்பொருள்களான
இசைக்கருவிகள் பற்றி
விளக்குகிறது. தமிழ்ப்பண்ணிசை, மிடற்றிசை
(வாய்ப்பாட்டு), நரம்புக்
கருவியிசை (யாழ்)
குழற்கருவியிசை (குழல், வாங்கியம்), முழவிசை
(மத்தளம், தண்ணுமை, கொட்டு, பறை)
ஆகியவை தமிழிலிருந்தும் தமிழர்
வாழ்வு நெறியிலிருந்தும் பிரிக்கமுடியாதவை.
பின்னர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வடக்கிலிருந்து கோதாவரிக்கரைக்கு வந்த ஆரியர்களான பிராமணர்கள் தமிழைப்பிரித்து அந்தப் பகுதியில் தெலுங்காக மாற்றினர். தாங்கள் உருவாக்கியதான, ஒன்றுக்கும் பயனில்லாத, சமஸ்கிருதத்தின் வடிவில் புதிய எழுத்துக்களை தெலுங்குக்குக் கொடுத்து வடிவமைத்தனர். அவ்வாறே, பத்தாம் நூற்றாண்டில், கருநாடகப்பகுதித் தமிழைப்பிரித்துக் கன்னடமாக மாற்றினர். பதினொன்றாம் நூற்றாண்டில் மேற்குத் தமிழ்நாட்டுப் பகுதியை மலையாள மொழிபேசும் பகுதியாக மாற்றினர். இவற்றுக்கெல்லாம், அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் ஆங்காங்கே அதிகார மையங்களைக் கைப்பற்றுவதும் அவற்றின் மூலம் எண்ணற்ற சதிச்செயல்கள் செய்வதும்தாம்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கால் அம்மையார்தான் இசைத் தமிழின் முதல் இயலிசைப் புலவர் ஆவார்.. இவர் பாடிய திருவாலங்காட்டுத் திருப்பகங்கள் இரண்டும் (மூத்த திருப்பதிகங்கள்) நைவளப் பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் அமைந்த இயலிசைப்பா பதிகங்களாகும். இவர் பாடிய இப்பண்கள், "அவரது காலத்திற்குப் பின்னால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் இசையை வளர்த்தவர்களுக்கு முன்னோடியாக விளங்கின". இப்பண்கள் இன்றும் பாடப்பெறுகின்றன.
காரைக்கால் அம்மையாரின் பனுவல்களில் முதற் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், ஏழு இன்னோசைகளுக்குமான தமிழ்ப்பெயர்கள் பதிவாகியுள்ளன. ‘துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை’ என்பது அப்பகுதி. அப்பாடலின் பொருள் துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அந்தப் பண்களின் தன்மையோடு ஆடுகின்ற எங்கள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருவாலங்காடேயாகும் என்பதாகும்.
துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு, தகுணிதந் தந்துபி தாளம்வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
இவ்வினிய தமிழ்ப்பண்களை, அதுவரை இசையை வெறுத்திருந்த ஆரியம் கடத்திச்சென்று 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர் மாற்றிக்கொண்டது வேறொரு தனிக்கதையாகும்.
தமிழரின்
தமிழிசை தொடர்பான அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்க, ஐந்தாம்
நூற்றாண்டைச் சேர்ந்த நமது காரைக்காலம்மையாரை விட்டுவிட்டு, நமது திருவையாற்றுத் தமிழ் மண்ணில், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தமிழை வெகு தீவிரமாக
வெறுத்தொதுக்கியவருமான தியாகப்பிரம்மத்தை இசைவிற்பன்னராகக் காட்டி
விழாவெடுப்பதையும், அந்த
விழாக்களில் நமது தமிழிசை
புறக்கணிக்கப்பட்டதையும் நாம் காண்கிறோம்.
எழில்மிகு பூம்புகாரை மீண்டும் நிறுவியவரும், நாற்பது ஆண்டுகள் ஆரியம் சதிசெய்து எதிர்த்து வந்த திருவள்ளுவர் சிலையை குமரிக்கடலில் நிறுவி, தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை இறுக்கி நிலைப்படுத்தியவரும், இலங்கைக்குள் நுழையக்கூடாது என்று 1960 களிலிருந்து அந்நாட்டு அரசால் தடைசெய்யப்பட்டிருந்தவருமான கலைஞர் மீதான அடக்கமுடியாத சதுர்வர்ணவெறியின்பாற்பட்ட வன்மத்தின் காரணமாக, ஆரியம் இன்று புதியதோர் சதித்திட்டத்தை உருவாக்கி, அந்தச் சதிச்செயலை நடைமுறைப்படுத்த, தமிழர்களில் ஒரு கூட்டத்தைப் பயன்படுத்தி, கலைஞர் தமிழரல்லர், அவர் தெலுங்கர் என்று பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளது.
கலைஞர் தமிழர் அல்லர் என்றால், காலங்காலமாக இசைத்தமிழ் வளர்த்த தமிழ்க்குடிகள் எங்கே என்ற கேள்விக்கு இந்தக் கூட்டத்தினர் விடை தருவதில்லை.
தமிழர்கள் எவ்வாறு, தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாகப் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறார்களோ அதுபோல அன்றைய இசைத்தமிழ்க் குடிகள் அந்தத்த மொழிப்பிரிவுக்குள் இருக்கின்றன என்பதே உண்மை. மேலும், கலைஞரைத் தெலுங்கர் என்று ஆந்திர மக்கள் சொல்லுகிறார்கள் என்று காணொளிகள் காட்டுகின்றனர். இது நகைப்புக்குரியது மட்டுமே.
கலைஞர் தமிழர் அல்லர் என்று கூறி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அதனால் அவர்களுடைய ரசிகர்களும் சீடர்களும் உருவாக்கிய புதுக்கதைதான் கலைஞர் தெலுங்கர் என்பது. கலைஞரைத் தெலுங்கர் என்று ஏற்றுக்கொள்வது தெலுங்கர்களுக்கு ஆதாயம்தான். எனவே, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ரசிகர்கள் சொல்வதை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாடுகிறார்கள். அதனை ஜெயலலிதா ரசிகர்கள், அது ஒரு சான்று என்று காட்டுகிறார்கள். பேதமை. இதைவிட வேடிக்கையாக சட்டநாதன் குழுவின் அறிக்கையையெல்லாம் காட்ட முயல்கிறார்கள் இந்த அடிமைக்கூட்டத்தினர்.
அப்போதும் காலங்காலமாக இசைத்தமிழ் வளர்த்த தமிழ்க்குடிகள் எங்கே என்ற கேள்விக்கு இந்தக் கூட்டத்தினர் விடை தருவதில்லை.
சதுர்வர்ண வெறியர்களான நாக்பூர் கூட்டம் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் செய்யமுயலும் கொடுமைகளைவிடக் கொடுமையான செயலை, தமிழுக்கு எதிராக, இசைச்தமிழுக்கு எதிராக, தமிழ் நாட்டுக்கு எதிராக இந்த ஆரிய அடிமைகள் கூட்டம் செய்துவருகிறது.
கலைஞரை வசைபாடுவதற்காகவே நேர்ந்து விடப்பட்ட இக்கூட்டம், தமிழிசையை, தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளை ஆரியர் மேலும் திருடவும், இசைத்தமிழ் வரலாற்றை ஆரியர் மேலும் சிதைக்கவும், உதவிசெய்து ஆரியருக்கு அடிமைச் சேவகம் செய்கிறது.
இது தமிழ்நாடு! தமிழ் நிலம்! உலகெங்கும் நாடுகள் 'தொன்றுதொட்ட தாயகக் கொள்கை' (Traditional Homeland Concept) என்ற அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இந்தத் தமிழ்நாட்டில் மாற்றாரைக் குடியேற்றம் செய்து தமிழர்களைச் சிறுபான்மையினராக ஆக்கிவிட்டால்கூட இந்த நிலத்தின் ஆட்சிமொழி தமிழாகத்தான், தமிழாக மட்டுமேதான் இருக்கும். தமிழ் என்ற மொழிக்கு தமிழ்நாடு என்பது நிலம் சார்ந்த அடையாளம். இந்த நிலத்திற்குள் வருபவன் தமிழ் கற்கவேண்டும், தமிழில் கற்கவேண்டும், தமிழைக் காக்க வேண்டும். இதுதான் 'தொன்றுதொட்ட தாயகக் கொள்கை' யின் அடிப்படை நியதியாகும்.
இதற்கெதிராகச் செய்யும் சதிகள் அனைத்தும் இனக்கொலை (Genocide), என்ற வகைப்படுத்தப்பட்டுள்ள இனவெறிசார்ந்த குற்றமாகும் (Racial Crime). அவ்வாறான குற்றம் செய்யும் வடஇந்திய ஆட்சியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்படுவர்.
இன்றைய பா.ஜ.க. கட்சி, காலங்காலமாக, ஜைன புத்தர் காலம் முதல், பலவித இனக்கொலைகள் செய்தவர்களின் வழிவந்தோருடைய கட்சி. அதனால்தான், வடவரை வரவழைத்துக் (Colonisation) குடியமர்த்தி , அவர்களுக்கு வீடுகளும் இலவசமாகக் கட்டிக்கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கையிலேயே கொக்கரிக்கிறது.
தமிழர்களின் வேலைவாய்ப்பைத் தமிழ்நாட்டிலேயே தட்டிப்பறித்துவிட்ட, தமிழரகளைத் தமிழ்நாட்டிலிருந்து துரத்திவிட்டு , இந்நிலத்தைத் தடசிணப் பிரதேசமாக இதை மாற்ற முயலும் ஆரியக் கொடியோர, தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையாவது, அவர்கள் செய்வது அனைத்துலகச் சட்டப்படி குற்றமாகும் என்பதே.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் காலங்காலமாகத் தமிழுணர்வோடு தமிழுக்காக தமிழருக்காக வாழும் பல நல்ல உள்ளங்களை, நா.த.க. சீமான் போன்ற ஆரிய உளவாளிகள் கூட்டங்கள், தமிழரிடமிருந்து பிரித்து வைத்து, தமிழருக்கெதிரான ஆரியச் சதிகள் நிறைவேறத் துணைபோகின்றன.
கலைஞரைத் தமிழர் அல்லர் என்று கயமைப்பரப்புரை செய்யும் இக்கூட்டம், ஜெயலலிதாவின் இமாலயக் கொள்ளையைப் பற்றி வாய் திறக்காமல், குடிகாரனைப்போல, எந்தக் கேள்விக்கும் விடைதராமல், திரும்பத்திரும்ப கலைஞர் தமிழர் இல்லையென்று சொன்னதையே சொல்லிக்கொண்டு ஆரியர்களுக்குத் தரகு வேலையாக தமிழ்த் துரோகப் பரப்புரைகளைச் செய்துகொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் கதையில் பினாகபாணி என்று ஒரு இளைஞன் வருவான். அவன் ஒரு கொலை செய்துவிட்டு, அந்தக் கொலையைச் செய்தவன் வந்தியத்தேவன் என்று பொய்ப்பரப்புரை செய்வான். சில காலத்திற்குப் பிறகு வந்தையத்தேவன் தான் அந்தக் கொலையைச் செய்தான் என்று அவனே நம்பத் தொடங்கிவிடுவான். அதுபோல கலைஞருக்கு எதிராகப் பொய்ப் பரப்புரை செய்ய அனுப்பப்பட்ட உளவாளிக்கூட்டம் ஒன்று தற்போது தனது பொய்யை தானே நம்பத்தொடங்கும் மடமை நிலைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழர்களின் போராட்டக் களத்தை எதிரிகளுக்கு வசதியாக திசை திருப்பும்வேலை செய்துகொண்டிருக்கிறது. கயமை.
எதிரிகள் எதிரிகளை மதிப்பார்கள். ஆனால், எதிரிக்கூட்டத்திலிருந்து தங்களுக்கு உதவி செய்யும் துரோகிகளை இழிபிறவிகளாகவே நடத்துவார்கள். ஆனால், வரலாறு காட்டும் இந்த உண்மைகள் அந்த இழிபிறவிகளுக்குத் தெரிவதில்லை. அவர்கள் ரோமாபுரி அடிமைகள் போல தொடர்ந்து அடிமைகளாகவே ஆரியர்களுக்கு Gladiator வேலை செய்துகொண்டிருப்பார்கள்.
தமிழ் வாழ்கிறது, காலங்காலமாக, எதிரிகளிடமிருந்தும் இவ்வாறான ஆரிய அடிமைத் துரோகிகளிடமிருந்தும் தப்பி!
தமிழ் வாழும்! தமிழ் கூறு நல்லுலகம், தமிழைக் கண்டு அஞ்சும் சதுர்வர்ண வெறியர் (Apartheidists) கூட்டத்தாரை அடக்கி வைக்கும். தமிழால் மட்டுமே அவர்களை அவ்வாறு அடக்கமுடியும; அதன்மூலமாக இவ்வுலகையே அன்பு சார் நல்லுலகாகத் தமிழ் மாற்றும் !!
சிலம்பும் வள்ளுவமும் காத்த அஞ்சுகம் முத்துவேலர் மகன் கலைஞர் தமிழரே!
ஆரிய
உளவாளிகளிடமிருந்து இசைத் தமிழைக்
காப்போம்
!!
சிறப்பான கட்டுரை. தொடர்ந்து வரும் பொய்யுரைகளுக்கு நல்ல பதில்.
ReplyDelete