“பிராமணரும் பிராமணரல்லாதாரும்’ என்று கூறும் போது யான் முக்கியமாகச் சென்னை மாகாணப் பிராமணரையும் பிராமணரல்லாதவரையுமே குறிக்கிறேன். ‘பிராமணரல்லாதார்’ எனும்போது, முகமதியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள் என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன்.” (பக்கம் 91- வ.உ.சி-யின் நூற்கோவை -தொகுப்பாசிரியர் செ.திவான் - அருணவிஜய நிலையம் - சென்னை ). “பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையும் பகைமையும் வளர்ந்து இப்போது துண்டு விட்டுப் போகும்படியான நிலைமைக்கு (Breaking point) வந்துவிட்டது. உண்மைத் தேசாபிமானிகள் இப்பொழுது விரைந்து முன்வந்து பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்குமுரிய உண்மை காரணங்களை கண்டு பிடித்து ஒழிக்காத விஷயத்தில், நாம் சுய அரசாட்சி என்ற பேச்சையும் கூட விட்டு விடும் படியான நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டு விடும் என்று யான் அஞ்சுகிறேன்...
நமது தேசத்தின் வடமாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்று நமது மாகாணத்தில் உள்ள சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன வெட்கக்கேடு!
நமது
மாகாணத்தில் நம்முடன் வசித்து வரும்
பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையின்மையையும்
பகைமையையும் நீக்கி அவ்விரு வகுப்பினர்களுள்ளும் ஒற்றுமையை உண்டு பண்ண மாட்டாதார்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள
பகைமையையும் சண்டைகளையும் நீக்கி
அவ்விரு வகுப்பினர்களுள்ளும் ஒற்றுமையை உண்டாக்க போகின்றனறாம்! இது புதுமையினும் புதுமை!
பிராமணரக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள
சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும், சுதேச மன்னர்கள் அரசாட்சிக்கு உட்பட்ட நாடுகளில் ஜாதிச் சண்டைகள் இல்லை
என்றும், நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்து விட்டால் ஜாதிச் சண்டைகள் எல்லாம்
நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர்.
இந்த மூன்றும் முழுப்பொய்.
பிராமணர் பிராமணரல்லாதார் சண்டைகளுக்கு காரணம் ஒன்றுமே இல்லையெனின், ராஜாங்கத்தாராலோ மற்றவராலோ அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது. சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் ஜாதிச்சண்டைகள் இல்லாமல் இல்லை; அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. .. இரண்டாவது காரணம், மேற்கண்ட படி தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்ற ஜாதியர்களுக்கு விதித்த அபராத தண்டனை. அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து நம் திருவாளர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் பிராமணரல்லாதார்களுக்குக் கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தித் தங்கள் அபராத தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைக்குரிய
மூன்றாவது காரணத்தைப போக்குவதுதான் மிகக் கஷ்டமான காரியம். இக்காரண
விஷயத்தைப் பற்றி தேசத்தலைவர்கள் என்று சொல்லப்படுகிற பிராமண
சகோதரர்களில் சிலர் பேசுகிற பேச்சுக்களைப்
பார்க்கும் பொழுது மிக வியப்புத் தோன்றுகிறது. இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக
இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்ற (பிராமணரல்லாதார் அடங்கிய) ஒரு
கட்சியாரை ஒழிப்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் இரட்டையாட்சிக்கு உதவி புரிய வேண்டியவர்களாயிருக்கிறார்கள் என்று
ஒரு பிராமணத் தலைவர் சிலர் தினங்களுக்கு முன் பேசியிருக்கிறார். ஆ! என்ன
ஆச்சரியம்!
நமது
தேசத்தில் நூற பேர்களுக்கு மூன்ற பேர்களாயிருக்கின்ற நம் பிராமண சகோதரர்கள், நமது தேசத்து இராஜாங்க உத்தியோகங்களில் நூற்றுக்கு 97 வீதமும்
அவ்வத்தியோகங்களில் இந்தியர்கள் பெரும் சம்பளத் தொகையில் நூற்றுக்கு 97 வீதமும் (இக்கணக்கு
சிறிது ஏறத்தாழ இருக்கலாம்) அடைந்து வருகிறபோது, பிராமணரல்லாதார்கள் இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரை
பலப்படுத்துகின்றார்கள் என்று காங்கிரஸ் தலைவர் என்னும் பிராமணர் ஒருவர்
பேசுவாராயின், மற்றைப் பிராமணர்கள் என்னென்ன பேசத் துணிய மாட்டார்கள்?
மேலதிக விவரங்களுக்கு:
No comments:
Post a Comment