Monday, 17 November 2025

தமிழா ! வேதத்தைப் புறக்கணி ! விலக்கி வை ! அது உனக்கானது அல்ல!!!

வேதங்கள் ஆரியர்கள் நலனுக்காகத்தான் எழுதப்பட்டவை. அனைத்து மனித இனத்தின் நலனுக்காக எழுதப்பட்டது அல்ல. (The orthodox view was that “the Vedas were written in the sub-continent “for the benefit of the Aryan peoples”. Page 35 - Advanced History of India - by K. A. Nilakanta Sastri and G. Srinivasachari - 1970).



"Vedas are a worthless set of books", said Dr. B.R.Ambedkar. 



ஆம். மகாவீரரும் புத்தரும் வேதங்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்று பலமுறை தெள்ளத்தெளிவாகச் சொல்லிவந்துள்ளனர். "Vedas were a waterless desert, a pathless jungle and perdition”- as found recorded in Digha Nkaaya & Tevijja Sutta –para 248 –Buddha had also said in Brahma jaala Sutta that Vedas were ‘a low art’- Page 17- ibid.



வேதத்தின் பிடியிலிருந்து கோயில்களை விடுவியுங்கள். வேதத்திற்கும் உருவ வழிபாட்டிற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை. வேதங்களைக் காட்டி மக்களையும் எம்மையும் வேதியர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறைவழிபாட்டுக்கு வேதங்கள் உகந்தவை அல்ல. வேதங்கள் சூதானவை.



"வேதநெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறிமுழுதும்

ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணரத்தனையே"

என்றும்

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மை வெளித்தோன்ற உரைத்தலிலை

என்ன பயனோ இவை!

என்றும்

வள்ளலார் கூறிவந்துள்ளார்.

எனவே, தமிழர்களே! 

தமிழில் வழிபாடு செய்யுங்கள். 

நீங்களே செய்துகொள்ளுங்கள். 

அன்பே சிவம்!

"சிவத்தைப் பேணிற் தவத்திற்கழகு!", சொன்னவர் ஔவையார். 

undefined

பிராமணர்களின் வேதமானது சிவத்தைப் பேணாதது மட்டுமல்ல. சிவத்தை மிக அசிங்கமாகப் பழித்து sisnadevata என்றுஇழித்துரைத்தது. 

இந்த ரிக்வேதம் நமக்கானதல்ல. பிராமணர்களுடையது. பிராமணர்களுக்கானது.

வேதத்தை ஒதுக்குவோம்!!

சிவத்தைப் போற்றுவோம்! 

 

 


No comments:

Post a Comment