15.09.1905:
வங்காளம்
இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து வங்காளத்தில் பெருங்கலவரம்
நடைபெறுகிறது. அரசாங்கம் பெரும் அடக்குமுறையை (Reign of Terror)க் கையாள்கிறது. மக்கள்
கிளர்ந்தெழுகின்றனர்.
இந்தப்
போராட்டத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில்,
சென்னக்கல்லூரி மாணவர்கள் கூடிப்
போராட்டம் தொடங்குகிறார்கள். அந்தப் போராட்டம் நடைபெறும் இடம் சென்னை மரீனா
கடற்கரை. வரலாற்றில் முதன் முதலாக சென்னை மரீனா கடற்கரை போராட்டக் களமாக
மாறுகிறது. அது மாணவர்கள் தேர்ந்தெடுத்த களம்.
01.05.19907 முதல் 09.05.1907
வரை:
உரிமைப்
போராட்டக் களத்தில் திலகரின் வலதுகையாகத் தீவிரவாதியாகச் (Extremist) செயல்பட்ட விபின் சந்திர பால்,
சென்னை மரீனா கடற்கரையில் ஒன்பது
நாட்கள் சுதேசி இயக்கத்தைப் பற்றித் தொடர் உரையாற்றுகிறார். இவ்வளவு பெரிய மக்கள்
திரளை நான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் வியக்கிறார். (“Nor did I expect
such a large gathering as I see before me” - Speeches of Sr. Bepin Chandra Pal
- Delivered at Madras . This book had been published in 1907)
10.05.1907:
சுதேசி
இயக்கத்தினை வலியுறுத்தி மூர்மார்க்கட்டிலிருந்து மரீனா கடற்கரை நோக்கி ஒரு பெரும்
ஊர்வலம் வருகிறது. 1500 பேர்
அந்த ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.
14.09.1907:
உரிமைப்போராட்டக்
கூட்டம் மரீனாவில் நடைபெறுகிறது.
17.09.1907:
மற்றொரு
பேரணியில் 1000 பேர்களுக்கு
மேலாகப் பங்கு கொண்டு மரீனா நோக்கி வருகின்றனர்.
23.09.1907:
பெரம்பூர்
இரயில்வே தொழிற்சாலையில் 2000 இரயில்வே
ஊழியர்கள்முன் விபின் சந்திர பால் உரையாற்றுகிறார்.
11.01.1908:
சென்னை
ஜன சங்கம் என்ற அமைப்பு திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டுகிறது.
போராட்டத்தின் வடிவத்தை தீவிரமாக்கத் திட்டமிடுகிறது (advocated aggressive
agitational approach).
அன்று
வெள்ளையர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பொதுக்கூட்டங்களுக்கோ, பேரணிகளுக்கோ அரசின் ஒப்புதல் பெறவேண்டும் என்ற
சட்டம் ஏதும் கிடையாது. ஆனால், அக்கூட்டங்களிலோ,
பேரணிகளிலோ இசைக்கருவிகள் இசைக்கப்
பட்டாலும், வாணவேடிக்கைகள்
இருந்தாலும் அரசின் முன்னொப்புதல் பெறவேண்டும் என்பது சட்டமாகும்.
08.03.1908:
பாரதியாரும்
எத்திராஜும் மறுநாள் 09.03.1908 அன்று
சிறை மீண்டுவரும் பிபின் சந்திர பாலுக்கு சென்னைக் கடற்கரையில் வெற்றிவிழாக்
கொண்டாட கூட்டமும் பேரணியும் நடத்த விழைகின்றனர். அதில் இசையும் வானவேடிக்கையும்
வேண்டுமெனத்திட்டமிட்டு, அரசின்
ஒப்புதல் கேட்டு மனுச் செய்கின்றானர். ஆனால், இவை இரண்டுக்கும் ஒப்புதல் தரப்படவில்லை.
09.03.1908:
மிகப்பெரிய
பேரணியும் சென்னை மரினாவில் பெரிய கூட்டமும் நடக்கிறது. பேரணியில் இசையும்
வாணவேடிக்கைகளும் இடம் பெறுகின்றன. (மேலதிக விவரங்களுக்கு: “National
Movement in Tamilnadu - 1905 to 1914 - Agitational politics & State
coercion” - Oxford University Press - 1994 - by N. Rajendran.
வெள்ளையர்
போய் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கும் மனு நீதிக் காவிகள் மத்தியில் ஆட்சியில்
இருப்பதனால், வெள்ளையர்
காலத்தில் இருந்த உரிமைகள் கூட இன்று மறுக்கப்படுகின்றன.
ஐ. பி.
எல். வணிகனின் உரிமைக்குப் பாதுகாப்பு:
ஐ. பி.
எல். வணிகத்திற்கு 4000 க்கு
மேற்பட்ட காவலரை அனுப்பி அந்த வியாபாரியின் வியாபார உரிமைக்குப் பாதுகாப்பு
கொடுத்தது இன்றைய அரசு.
ஆனால்,காவிரிப் போராட்டத்திற்கு மரீனாவை
மறுத்தது.இதுவே, தமிழருக்கு
எதிரான கொடுமைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற காவிகளின் திட்டம்தான் என்பதைத்
தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
https://www.facebook.com/notes/884878732050863/

No comments:
Post a Comment