Tuesday, 26 September 2017

Contribution of Islamic writers to Tamil !


சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் உக்ரைன் நாட்டவர்.
தமிழில் முதன் முதலில் "அசன்பே சரித்திரம்" என்ற நாவலை எழுதிய சித்தி லெப்பை மரைக்காயர் சீனாக்காரர்.
சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சோமாலியா நாட்டவர்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்து, “நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்” என்று சிறப்பிக்கப்பட்ட குலாம் காதிர் நாவலர் கொரியாக்காரர்.
இராமத்தேவராக இருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி வைத்திய நூல் எழுதிய யாக்கோபு சித்தர் உகாண்டா நாட்டவர்.
நற்றமிழில் நான்கு காப்பியங்கள் எழுதிய காயல் சேகனாப்புலவர் செர்பியா நாட்டவர்.
முத்தமிழில் மூன்று இலக்கியங்கள் படைத்த வண்ணக் களஞ்சியப் புலவர் வெனிசுலா நாட்டவர்.
மிஃராஜ் மாலை எழுதிய ஆலிம் புலவர் அமெரிக்காக்காரர்.
பெண் எழுத்தாளர்களின் முன்னோடி நாகூர் சித்தி ஜுனைதா பேகம் சுவீடன் நாட்டவர் 
யூசுப்-ஜுலைகா காவியம் வரைந்த சாரண பாஸ்கரணார் சோவியத் யூனியனிலிருந்து வந்தவர்.
இராமேசுவரம் உத்திரகோச மங்கை கோவிலை கட்டிய வள்ளல் சீதக்காதி செர்மன் நாட்டுக்கார்ர்.
மசலா (புதிர்-வினா). நாமா (வரலாற்றுக்கதை) , கிஸ்ஸா (கதை வடிவம்), முனாஜாத்து (இறைவேட்கை பாடல்), படைப்போர் (போர் நிகழ்ச்சிகள்), திருமண வாழ்த்து (திருமண பழக்க வழக்கங்களைக் கூறுவது) , நொண்டி நாடகம் (சிற்றிலக்கிய நாடக வகைகளில் ஒருவகை).
என்றெல்லாம் எழுதிக் குவித்து தமிழ் இலக்கியங்களுக்கு புதுப்பொலிவு ஏற்றிய இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத அயல்நாட்டவர்.
தமிழ் இலக்கியத்திற்கு புது வடிவங்களும் பல பங்களிப்புகளும் செய்து வந்தவர்களை பார்த்து இன்று முளைத்த காளான்கள் கேட்கிறது உனக்கு மொழிபற்று இருக்கிறதா என?
மொழி பற்றை பற்றி யார் யாருக்கு பாடமெடுப்பது??
இதில் அரைகுறை சில்லரைகளின் அரேபிய அடிமை கதறல் வேறு. வரலாறை படித்துவிட்டு வாருங்கள் காவியில் ஒளிந்திருக்கும் சொம்புகளே..


Monday, 18 September 2017

இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள்:

இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள்:
By Jose Kissinger
============================================================
தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. 
முக்கியமானவை மட்டும் தருகிறேன்.
----
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50 
தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6
தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார்
- பரிபாடல் 9
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
- பரிபாடல் 4
__________________________________
தமிழர் :-
-------------
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
- புறநானூறு 19
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்)
மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
- புறநானூறு 35
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்)
தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள்
- பரிபாடல் 8
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்)
அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை
- சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காண
- முத்தொள்ளாயிரம் 24
________________________________
தமிழர்நாடு :-
---------------------
தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,
தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31
இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் 
தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
- பரிபாடல் 9
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்)
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
- பதிற்றுப்பத்து 63
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து)
தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227
(தமிழகம் எனும் சொல்)
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
- சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை)
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
- சிலப்பதிகாரம், வேனில் காதை
(வரம்பு அதாவது எல்லை)
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின் செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை
தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை
(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி)