Saturday, 7 September 2019

தமிழின் முல்லை நில வேந்தன் மாயோன் எனும் கண்ணன் எப்படி கிருஷ்ணன் ஆக்கப்பட்டார்?


R. Umamageswaran in Quora.


கண்ணன் யாதவ குலத்தில் தேவகி வயிற்றில் பிறந்தான். அவனை யசோதை வளர்த்தாள். கண்ணன் ஆயர்குலத்திற்கு ஏற்ப ஏழு எருதுகளை அடக்கி ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையை மணந்தான். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் கண்ணனின் மனைவியான நப்பின்னையை ஒன்பது ஆழ்வார்களும் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர்.



சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலித்தொகை முதலான சங்க இலக்கியங்களில், நப்பின்னை பற்றிய பாடல்களில், அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்திகள் உள்ளன.
பெரியாழ்வார் (66, 70, 160, 162, 246, 333). ஆண்டாள் (491,492,493). குலசேகர ஆழ்வார் (660, 662, 677). திருமழிசை ஆழ்வார் (764, 784, 806, 850).
திருமங்கையாழ்வார் (960, 1061, 1072, 1136, 1144, 1152, 1172, 1176, 1181, 1226, 1247, 1281, 1290, 1353, 1359, 1491, 1492, 1505, 1506, 1542, 1614, 1703, 1730, 1966, 1971, 2020, 2080).
பொய்கையாழ்வார் - 2143; பூதத்தாழ்வார் (2244). பேயாழ்வார் (2306, 2330, 2366, 2414). நம்மாழ்வார் (2498, 2546, 2632, 2672,2674, 2719, 2748, 2758, 2835, 2884, 2944, 2992, 3022, 3087, 3177, 3191, 3261, 3265, 3280, 3356, 3453, 3469, 3635, 3637, 3659, 3702).
மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் சிகரங்களாக ""ஒரு மகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள், மற்றைத் திருமகளோடும்'' என்று திருமங்கையாழ்வார் பாசுரத்திலும் (1176), ""பூமகள், மண்மகள் ஆய்(ஆயர்)மகள்'' என்று நம்மாழ்வார் பாசுரத்திலும் (3469) நப்பின்னையைப் பூமகளோடும் (திருமகளோடும்), மண்மகளோடும் (பூதேவியோடும்) சேர்த்துக் கூறியுள்ளது சிறப்புக்குரியது.
மேலே குறிப்பிட்டுள்ள ஒன்பது ஆழ்வார்கள் 75 பாசுரங்களில் நப்பின்னை பிராட்டியைப் போற்றிப் பாடியிருந்தும், அவரை வைணவர்கள் கோயிலிலும், வீட்டிலும் போற்றி வழிபடாமல் புறக்கணித்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை. எங்கோ ஒரு சிலர் "நப்பின்னை' எனத் தம் பெண் பிள்ளைகளுக்குப் பெயரிட்டுள்ளது பாராட்டுக்குரியது. வைணவக் கோயில்களில் "நப்பின்னை' இடம்பெறவில்லை.
மூவரும் ஒருவரா?
1. தொல்காப்பியத்தில் முல்லை நில ஆயர்களின் தெய்வமாக மாயோன் (கண்ணன்) சொல்லப்பட்டிருக்கிறார். கண்ணன் என்பதும் நப்பின்னை என்பதும் தூய தமிழ்ச் சொற்கள். ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழகத்தில் தோன்றி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடினர். அதில் எந்தவொரு பாசுரத்திலும் கிரந்த எழுத்து இல்லை. எனவே, கண்ணன் தமிழ் நாட்டுத் தெய்வம்.
2. கிருஷ்ணன்: இவன் துவாரகை என்ற பகுதியை ஆண்ட வடநாட்டுச் சிற்றரசன். கிருஷ்ணன் என்ற பெயரிலேயே கிரந்த எழுத்து வந்துள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் ஓரிடத்திலும் கிருஷ்ணன் என்ற பெயர் இல்லை. இவன் பல சூழ்ச்சிகளைச் செய்து, குருஷேத்திரப் போரில் பாண்டவர்களை வெற்றிபெறச் செய்தவன். இவன் வடநாட்டுத் தெய்வம். (கிருஷ்ணனின் மனைவியர் பாமா, ருக்மிணி)
3. திருமால்: தெய்வ உலகத்தில் திருமாலாக சங்கு, சக்கரங்களோடு இருக்கிறான். அவன் மனைவி திருமகள் (கோயில்களில் ஸ்ரீதேவி, பூதேவி மனைவியராக உள்ளனர்).
மேற்கண்ட மூவரும் ஒன்றல்ல.

https://ta.quora.com/tamilin-mullai-nila-ventan-mayon-enum-kannan-eppati-kirusnan-akkappattar

No comments:

Post a Comment