Thursday, 19 September 2019

தைப்பொங்கல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் : பதிவு செய்த பேராளர் இராபர்டோ டி நொபிலி !




பேராளர் இராபர்டோ டி நொபிலி கி.பி. 1606 ல் மதுரைக்கு வருகிறார். அன்றிலிருந்து தமிழ்நாட்டில், (சில ஆண்டுகள் இலங்கையில்) வசிக்கிறார். கிபி 1656ல், தனது 79 ஆவது அகவையில், அவர் சென்னை மைலாப்பூரில் இயற்கை எய்துகிறார்.




15.01.1609ல் மதுரையிலிருந்து அவர் எழுதிய கடிதத்தில் “இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், பொங்கல் என்று அழைக்கப்பெறும், புது அரிசியை இறைவனுக்குப் படைக்கும் மிக மேன்மையான பண்டிகை ஒன்றைக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். இந்தப் பண்டிகையைக் கொண்டாட இயலவில்லை என்றால் அது அவமானம் என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்று தொடங்கி அப்பொங்கல் பண்டிகை பற்றி மிக விரிவாக எழுதுகிறார். (“The Hindus,” writes Nobili to Laerzio of the Pongal in 1609, “are accustomed, at the beginning of each year, to celebrate a very solemn festival, called Pongal, to offer the new rice to the gods. It consists in cooking with great ceremony their rice mixed with milk, before an idol. According to them, it is a disgrace not to be able to celebrate that festival. Page- 116- A Pearl to India: The Life of Roberto de Nobili – Vincent Cronin. Also in Page 115 ibid.)




இந்த ஒரே கடிதமே, அதில் உள்ள “at the beginning of each year" என்ற சொற்றொடரே, தமிழர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, தை முதல் நாளைத்தான் புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடினர் என்பதற்கு உறுதியான சான்று கூறும்.

தமிழா!

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் காலங்காலமாகக் கொண்டாடிவந்துள்ளனர். இந்த உண்மையை இராபர்ட் டி நொபிலி மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். இந்த சான்று தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான மாற்றாரின் அனைத்துச் சொல்லாடல்களையும் முறியடிக்கின்றது. நாயக்கர்கள் ஆட்சியின்போதுகூட தைமாதத்தில் புத்தாண்டு கொண்டாடும் வழமை மாறவில்லை. 

தமிழா! ஆரியக் கடத்தல்காரர்களிடம் ஏமாறாதே !


ஆரியம் கொடியது.

ஆரியத்தின் கொடும்பிடியிலிருந்து தமிழையும் தமிழரையும், தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும் மீட்டெடு !


இது தொடர்பான இன்னொரு பதிவைக் காண:



 

6 comments:

  1. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

    ReplyDelete
  2. நல்ல தகவல், தமிழ் மாதங்கள் சமஸ்கிருத ஆண்டுகளுடன் பொருத்துவதே முரண்பாடு. இதை ஏனோ புரிந்து கொள்ள மறுக்கின்றனர்

    ReplyDelete
  3. அவர் ஆண்டு தொடக்கத்தில் என்பது,
    ஏன் ஜனவரி மாதத்தைக்குறிப்பதாக கொள்ளக்கூடாது ...!?
    தை-1 என்ற தேதியை அவர் பயன்படுத்தவில்லையே..!?

    ReplyDelete
  4. சூழ்ச்சிகளை வென்று தமிழினம் முன்னேறத் தொடங்க வேண்டும்

    ReplyDelete
  5. நல்ல பதிவு

    ReplyDelete
  6. புதிய தகவல். வலுவான சான்று.

    ReplyDelete