இராமாயணக் கதை கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், அதாவது உலகமகா பயங்கரவாதியாகிய சாணக்கியன் காலத்திலும் அதற்குப் பின்னர் உள்ள காலத்திலும் புனையப் பட்டது. இராமாயணத்திற்குப் பிற்பட்ட நூல்தான் மகாபாரதம். அந்தக் காலத்தில் பிராமணர்கள் வாழ்ந்த முறையை, அவர்கள் இன்று புனிதமாகக் காட்டும் மகாபாரதக் கதை தெளிவாகப் பதிவு செய்துள்ளது. அந்த மகாபாரதத்தில், பிராமணர்கள் எவர் மனைவியை வேண்டுமாயினும் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றுவிடும் வழக்கம் வெகுவாக இருந்ததைப் பதிவுசெய்துள்ளது. அது மட்டுமின்றி அதனை பிராமணரல்லாத மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றும் எதிர்க்கவில்லை என்றும் கருத்துப் பரப்புரை செய்தது அந்த மகாபாரதம். பிராமணர்கள் செய்த மகா பாதகங்களை புனிதச் செயல்களாகக் காட்டியது அந்த மகா பாரதம். ஒருநாள், உத்தலகா என்பவர் தனது மனைவியுடனும் தனது மகன் ஸ்வேதகேதுவுடனும் உட்கார்ந்திருந்தார். அப்போது பிராமணர் ஒருவர் வந்து உத்தலகாவின் மனைவியின் கையைப்பிடித்து இழுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். தனது தாயை வேறொருவன் அழைத்துச் சென்றது கண்ட ஸ்வேதகேது கொந்தளித்தான். ஆனால், அது வழக்கம்தான் என்று அவனது தந்தை உத்தலகா அவனை சமாதானப்படுத்த முயலுகிறார்.
(One day, in the presence of Uddalaka, another Brahmana seized Swetaketu’s mother’s hand, and said, ‘Come with me!’ and she went with him. Thinking his mother had been taken by force, Swetaketu was furious. Seeing his son’s anger, Uddalaka said gently, ‘Do not be angry, my child. The women of every varna are entirely free, and their freedom is accepted since time out of mind. In sexual matters, they behave even like cows, and it is lawful and just.’ – Canto 122 – Sambhava Parva – The Complete Mahabharata – Ramesh Menon).
"அந்த நாளும் வந்திடாதோ" என்ற நப்பாசை இன்றும் சிலரை மாகபாதக நூலை புகழச் செய்கிறது.
No comments:
Post a Comment