பால கங்காதர திலகர் பிராமணர்களில் மிகக் கொடிய சதுர்வர்ண வெறியர் என்பது அனைவருக்கும் தெரியும். (சொடுக்கவும்: https://vaeyurutholibangan.blogspot.com/2014/10/tilak-vs-lower-castes-and-women.html ) பிராமணரல்லாத மக்களுக்கு கோலாப்பூர் சாகு மன்னர் உரிய உரிமைகளை கொடுத்தது தொடர்பாக அவருக்கு திலகரும் அவருடைய கொள்கையின்படி நடந்த பிராமணர்களும் எவ்வளவு தீங்கிழைத்தார்கள், இழித்துரைத்தார்கள் என்பதெல்லாம் வரலாறு காட்டும் உண்மைகளாகும்.
ஆங்கிலேயரை
எதிர்க்கும் போராட்டத்தில் காந்தியடிகள் வந்த பிறகு திலகரின் புகழ்
முழுமையாக மங்கத் தொடங்கியது. அதன் காரணமாக திலகரின் தொண்டர்களான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர்கள் சினங்கொண்டு மிகவும் கொந்தளிப்போடு
இருந்தார்கள் (..…….the rise of Gandhiji’s philosophy was the cause of
memory of that great leader of Maharashatra, the late Lokamanya Tilak and the
premier position taht Maharashtra held in the country’s politics during the
lifetime, being eclipsed”). காந்தியடிகளைக்
கொலைசெய்தவன் நாதுராம் கோட்சே என்ற மகாராட்டிர பிராமணன்தான் என்ற உண்மை வெளியில்
வந்ததும், நாக்பூரில்
உள்ள ஆர். எஸ். எஸ். அலுவலகத்திற்குமுன் கூடிய மக்கள் அந்தக் கட்டிடத்தின் உள்ளே
இருந்த
கோல்வால்கரையும்,
அவரோடு அமர்ந்துள்ள காவி கூட்டத்தினரையும்,
ஏறத்தாழ 40
பேர்களை உள்ளேயே வைத்து கட்டிடத்தோடு
எரித்து விடுவது என்று பேசிக் கொண்டனர்.
இந்த
விவரங்கள் அறிந்த காவல்துறை உயர் அதிகாரி அன்றைய உள்துறை அமைச்சரான மிஸ்ரா அவர்களை சந்தித்து விவரங்களைச்
சொல்லவும். மிஸ்ரா கோல்வால் கரையும் அவரது கூட்டத்தினரையும் கைது செய்து சிறையில் அடைக்குமாறு
செய்து காப்பாற்றினார்.
அப்போது அன்றைய இந்து சபாவின் தலைவர் பராஞ்சப்பே மிஸ்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி மக்கள் கூட்டம்
வெறிகொண்டு வருவதாகவும் அந்த கூட்டத்தில் இருந்து தன்னை
காப்பாற்ற வேண்டும் என்றும் கெஞ்சினார் . அன்றைய நிலையில் அவருக்கு மிகவும்
பாதுகாப்பாக இருக்கக்கூடிய
இடம் சிறைச்சாலை
தான் என்று கூறி அவரையும் நாக்பூர் மத்திய சபைக்கு அனுப்பி வைத்தார் மிஸ்ரா.
இந்த
வரலாற்று உண்மைகளை, தனது
வாழ்க்கை வரலாற்றில் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார், டி.பி. மிஸ்ரா, ( Page 56 & 57 -
Living an Era Vol. 2 by Dwarka Prasad Mishra quoting also from Pyarelal).
அன்றைய
நிலையில் மத்திய
அரசில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல், ஆர் எஸ் எஸ் இயக்கத்திடம் மென்மையாகவே இருந்தார் என்பது மக்களின் பரவலான கருத்தாக இருந்தது என்பதையும் மிஸ்ரா தனது நூலில் பதிவு செய்துள்ளார். அந்தக் கருத்து தவறானது என்று நிரூபணம் செய்வதற்கு மிஸ்ரா ஓரளவு முயற்சியும் செய்துள்ளார் தனது
நூலில்.
இன்றைய
நிலையில், அந்தக்
காவிக் கொடியோர் கூட்டம் பட்டேலுக்கு குஜராத்தில் பெரும் சிலை வைத்திருப்பது ஏன் என்பது இந்த விவரங்களின்
பின்னணியில் புரிந்து
கொள்ளத்தக்கது.
No comments:
Post a Comment