=================
இந்திய அரசியல் சட்டத்தின் 351 வது பிரிவுதான் சமஸ்கிருத மொழியை அரசியல் சட்டத்திற்குள் நுழைக்கிறது. அரசாங்கம் இந்தியை வளப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியைப் பெருமளவில் பயன்படுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் நிர்ணய சபையில் எந்தவித உரையாடலும் இன்றி சதிச் செயல் மூலமாக மட்டுமே நுழைக்கப்பட்டது. நுழைக்கப்பட முடிந்தது.
அரசியல் சட்டப்பிரிவின் 343 (1) ல் இந்தியைத் திணித்தது பிறகு இந்தி எண்களைத் திணித்தது ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் எதிர்த்து மிகப்பெரும் போராட்டம் செய்து, பட்டாபி சீதாராமையாவின் Casting Vote கயமைத்தனம் காரணமாகத் தோல்விகண்டு துவண்டிருந்த தென்மாநிலக் காங்கிரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், இந்தக் கயமைச் செயலைக் கண்டுகொள்ளும் திறன் இல்லாதவர்களாகியிருந்தனர்.
இந்த இரு பிரிவுகளும் இந்தி பேசாத அனைத்து மாநில மக்களுக்கும் பெரும் தீங்கு விளைவிப்பவை. இன அழிப்புக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பவை. உலக நாடுகளின் வரலாறுகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
இந்த இரண்டு சட்டப் பிரிவுகளாலும், எதிர்காலத்தில் இந்திபேசாத மாநிலங்களில் உள்ள பிராமணரல்லாத மக்கள் கல்விச் சுமை காரணமாகத் தங்கள் குழந்தைகள் தங்கள் தாய்மொழியைக் கற்பதைக் கைவிட்டுவிடச் செய்வர். (The Hindu editorially rebuked Rajaji on 16.08.1937 and said, “By making Hindi compulsory, the students get overloaded, the standard of education gets reduced and the educational value becomes defective”.)
அதன் விளைவாக இந்தி பேசாத மக்கள், இந்தியைக் கட்டாயமாகக் கற்கவும் பேசவும் வைப்பதற்கும், அதன் தொடர் விளைவாகத் தங்கள் அடையாளம், அதன் அடிப்படையிலான உரிமை, அதன் அடிப்படையிலான தங்கள் மொழிவழியான தொன்றுதொட்ட தாயகம் (Traditional Homeland) ஆகியவற்றைத் தொலைத்துவிட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுத் தங்கள் மாநிலங்களைவிட்டு மற்ற இந்தி பேசும் மாநிலங்களுக்கு, கூலித்தொழிலாளர்களாக மாற்றப்பட்டு விரட்டியடிக்கப்படவும் உள்ள சூழ்நிலையை இந்த 351 வது பிரிவு உருவாக்கியுள்ளது.
எனவே, இந்த இரு பிரிவுகளையும் மாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இந்திபேசாத மக்களின் இன்றைய தலைமுறையின் கடமையாகும்.
இந்த 343 (1) மற்றும் 351 ஆகிய இரு பிரிவுகளும் நேர்மையான முறையில் அரசியல் சட்டத்தில் இடம் பெறவில்லை. சதிச் செயல்களின் விளைவே இவை சட்டமானதன் காரணம், அதற்குக் காரணம் அரசியல் நிர்ணய அவையின் வரைவுக் குழுவில் பிராமணர்கள் 4/6 என்ற விகிதத்தில் அபரிமிதமாக இருந்ததுதான்.
கே. எம். முன்ஷி என்பவர் அந்த வரைவுக் குழுவில் இருந்தவர். இவர் மிக மோசமான சதுர்வர்ண வெறியர். பிராமணர்கள் உருவாக்கியதும் உலகிலேயே மிகக் கொடியதுமான சனாதனச் சதுர்வர்ண அமைப்பில் கீழ்த்தட்டுகளில் வைக்கப்பட்டுள்ள பிராமணரல்லாத மக்களின் துயர் பற்றிக் கவலைப்படாதவர்.
இவர் அந்த நால் வர்ண அமைப்பில் அவரவர் தகுதிக்கேற்ப (“the place his capacity and culture deserved”) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கொஞ்சம் கூட நா கூசாமல் பிராமணரல்லாத மக்களை இழிவு படுத்திப் பல்வேறு மேடைகளில் பேசியவர். மனச்சாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாதவர். இவரும் இவரைப் போன்றோரும் அரசியற் சட்ட வரைவுக்குழுவில் இருந்து கொண்டு பிராமணரல்லாத மக்களுக்கு எதிராகச் செய்த வேலைகள்தாம் இந்தியாவில் இன்று காவிக் கொடியோர் கூட்டத்தின் கொடுங்கோலாட்சி நடக்க வழிசெய்துள்ளது.
முன்ஷியுடைய வெறித்தனமான பேச்சுக்கள் அவர் உருவாக்கிய கல்வி நிலையமான பாரதீய வித்யா பவன் வெளியிட்டுள்ள நூலிலேயே கூடப் பதிவாகியுள்ளன. அவையாவன:
"புதுமை மோகத்தில் மூழ்கி இருக்கும் நாம் சாதி அமைப்பை நீர்கூடப் புகாத அளவுக்கு பிரிக்கப்பட்டு இருக்கும் ஒரு ஏற்பாடு என்றும் அதனால் இந்த அமைப்பு கால காலத்திற்கு சம உரிமையை மறுக்கும் அமைப்பு என்றும் நினைக்கிறோம். வர்ணாசிரமம் என்பது முழுக்க முழுக்க இந்தக் கருத்துக்கு மாறானது. சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் எந்த வகுப்பில் பிறந்தாரோ அந்த வகுப்பில் ஒரு பாதுகாப்பான இடத்தை அது அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய திறமைக்கும் பண்புக்கும் உரிய இடத்தை தர இந்தச் வர்ணாசிரம அமைப்பு வலியுறுத்துகிறது." (“We, with our modern
obsessions, look upon the caste system as a water-tight
arrangement, which sanctions enduring inequality. Varnashrama was
entirely different. It gave to each one a secure place in the class of
his birth, but demanded for every one the right to assume the place his capacity and culture deserved”, said Munshi, in his book, ‘I follow the Mahatma’ ( Page 259 -Views and Vistas – Bharathiya Vidhya Bhavan).
மும்பை கீத வித்யாலயாவின் பட்டமளிப்பு விழாவில், 20.07.1950, அவர் பேசியதாவது:
"மேல்நாடுகளின் சமூக அமைப்பை பார்த்து வியந்து கருத்துக் குருடர்களாக ஆகிப்போன நாம், உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் காட்டுவாசிகளாக உழன்று கிடந்த பொழுது இந்த நாடு முழுவதுமே மிகச் சிறந்த சமூக ஒருங்கிணைப்போடு வாழ வழி வகுத்த ஒரு அமைப்புதான் சதுர்வர்ண அமைப்பு என்ற உண்மையை உணரத் தவறிவிடுகிறோம்". “We, who are blinded by an admiration of the social apparatus of the West, fail to realise that Chaturvarna was a marvellous social synthesis on a country-wide scale, when the rest of the world was weltering in a tribal state” (ibid)
அதற்கு முன் 09.12.1943 அன்று கான்பூரில் விக்கிரமாதித்தன் இருநூறாம் ஆண்டு விழாவில் அவர் வர்னாசிரம அமைப்பை வியந்து புகழ்ந்து பேசிய பேச்சு அவர் எந்த அளவுக்கு மனச்சாட்சியோ, மனிதத் தன்மையோ இல்லாத கொடிய கருத்துக்கள் உடையவர் என்பதைக் காட்டியது:
“வர்ணாசிரம தர்மம் என்ற வியக்கத்தக்க சமூக ஒருங்கிணைப்புக் கொள்கை, தர்மத்தையும் சமூக அமைப்பையும் தாங்கி நிற்கும் இரும்பு வடமாக இருந்து வந்திருக்கிறது அதனால் சமூக குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் சுதந்திரத்தை அளித்துள்ளது. இந்த சமூக அமைப்பு வகுப்பு வாதப் போர்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. பல சமூகக் குழுக்கள் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத அளவு சார்ந்து இருக்கும் நிலையால் உருவானது ஆகும். இதில் உள்ள படிநிலை அமைப்பு என்பது, ஒவ்வொரு சமூகக் குழுவின் பண்பாட்டு அளவை பொறுத்து. அமைந்ததாகும்” (“The wonderful social synthesis – Varnashrama-dharma – provided an independence of social groups, the steel-frame which buttressed the social order and Dharma itself” ( Page 258 - ibid). He had also said, “The social order is not based on class war, but an inalienable interdependence of social groups; on a hierarchy arranged according to the degree of culture attained by each” ( 09.12.1943 -ibid).
இப்படிப்பட்ட சூத்திர துவேஷம் கொண்ட பிராமணர்களின் கூட்டம்தான் இந்திய அரசியல்சட்டத்தினை உருவாக்கும் குழுவில் மிகப்பெரும்பான்மை இடத்தை (4/6) ஆக்கிரமித்துக் கொண்டது.. அதே வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் சதுர்வர்ண அமைப்பைத் தீவிரமாக எதிர்த்தவர். “இந்து சமூக அமைப்பு என்பது ஏதோ தவறிப் போய் மக்களாட்சி முறைக்கு எதிரானதாக அமைந்துவிடவில்லை. அது மக்களாட்சி முறைக்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். அதில் உள்ள வர்ணபாகுபாடும் சாதிப்பாகுபாடும் சாதியே அல்லாதவராகப் பிரித்து வைப்பதும் இந்து மதத்தின் கொள்கைகள் அல்ல: அவை இந்துமதம் விதித்திருக்கும் கட்டுப்பாடான கட்டளைகள் ஆகும். உண்மையான மக்களாட்சி முறை வந்துவிடாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தடையரண்கள்தாம் இப்பாகுபாடுகள்" என்று கூறி வர்ணாசிரம அமைப்பின் கயமைத்தன்மையை மக்களிடம் எடுத்துரைத்தவர் அம்பேத்கர்.“The Hindu social system is undemocratic not by accident. It is designed to be undemocratic. Its division of society into varnas and castes, and of castes and outcastes are not theories but are decrees. They are all barricades raised against democracy.” (Page 284 – Dr. Babasaheb Ambedkar Writings and Speechers – Vol. 4 – Vasant Moon). இருந்தும் கூட இந்தச் சதுர்வர்ண வெறியர் கூட்டம் வரைவுக்குழுவில் தனக்கிருந்த 4/6 பெரும்பான்மை மூலமாக பலவிதமான சதிச்செயல்களைச் செய்து, அம்பேத்காரைச் செயல்பட விடாமல் தடுத்து, இந்தியாவில் காவிக்கூட்டத்தின் கொடுங்கோலாட்சிக்கு வழி வகித்து வைத்தது.
இப்படிப்பட்ட கொடியவர்களால் உருவாக்கப்பட்டதும் சதிச் செயல் காரணமாக முறையான உருவாக்கப்பெறாததுமான அரசியற் சட்டத்தின் 343 (1) மற்றும் 351 ஆகிய பிரிவுகள் திருத்தப்படவேண்டும்.
அன்றைய காங்கிரசுக் காரர்கள் மட்டுமே இந்தி பேசாத மக்களின் தலைவர்கள் அல்லர். அந்த அரசியல் நிர்ணய அவை முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையே கிடையாது. இந்த உண்மையை மகாவீர் தியாகி அந்த அவையிலேயே பதிவு செய்துள்ளார். Mr. Mahavir Tyagi said in the Constituent Assembly itself on 17.09.1949: "We have assumed that we are the representatives of the nation. Well, all of us have come through an indirect electorate - through the Legislative Assemblies of the Provinces, which had been elected when we were not free, when the British were there. These assemblies were elected in 1946. And we are making this constitution in the hope and with the claim that we are the accredited representatives of India. I am afraid technically we are not the representatives of India, de facto we might claim to be, but de jure we are not".
ஒரே ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் மட்டுமே இருந்த அரசியல் நிர்ணய அவையில், முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாதவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் இந்தி பேசாத அனைத்து மக்களையும் அடிமைகளாக்க வழிசெய்கிறது.
அரசியற்சட்டம் இயற்றியோரை Founding Fathers என்று விளிப்பதும் உண்டு.
அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கத்தான் வேண்டுமா?
மாட்டோம்,
அப்பன் செய்தது தவறு.
அப்பனின் எதிரிகள், முன்ஷி போன்றவர்கள், சதி செய்தது அங்கே அந்தக் கிணற்றை வெட்டவைத்தனர்.
அந்தச் சதிச்செயல்கள்தாம் முறியடிக்கப்படவேண்டும்.
எனவே, அரசியற் சட்டத்தின் 343 (1) மற்றும் 351 வது பிரிவுகள் கயமைத்தனமானவை. சதிகாரர்களால் நுழைக்கப்பட்டவை. அவை நீக்கப்படவேண்டும்.
=============================================
351. Directive for development of the Hindi language:
It shall be the duty of the Union to promote the spread of the Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary, primarily on Sanskrit and secondarily on other languages
======================
Art. 351 inserted on the sly
==========
Even sadder was the way in which Art. 351 was inserted as part of the Constitution unnecessarily and in total contradiction to the text of the Art. 343 (1). The text of Art. 351 had not been discussed in the Constituent Assembly, at all, as the members from the south had already lost their heart when they lost to Art. 343 (1) on 14.09.1949. There was no discussion about Art. 351 even in the meeting of the Congress members of the Constituent Assembly. It was, in fact, drafted only by the Drafting Committee (that had four Brahmins, one Non-Brahmin and one Muslim) and was introduced two months later, on 15.11.1949 and got passed without any discussion at all. The following discussion reproduced from the Minutes of the Consembly would show how easily Art. 351 has passed through the Consembly:
“Shri T. T. Krishnamachari : Amendment 491 may not be necessary because Kamath has moved amendments 394 and 395--practically the same amendment.
Mr. President : Very well. Then we come to article 351--amendment No. 492.
Dr. P. S. Deshmukh : What have you done with amendment 559 to article 320, Sir ?
Mr. President : I have taken it as moved. You are referring to amendment No. 559. Do you want to speak, Dr. Deshmukh?
Dr. P. S. Deshmukh : Yes, Sir. I am sorry to say that this new amendment does not appear to be at all satisfactory. First of all, Sir, it is very circuitous in its drafting. It is like …”
That was how Hindi which was, consciously and deliberately, prevented from being made as the national language or common language or ruling lanaguage or linguafranca through Art. 343 (1), had been made, on the sly, to become more than the link or common language, through Art. 351.
The way Sanskrit is glorified in Art. 351 indicates, clearly, the saffron religious tinge. It was conspiracy all the way. The fact was that the Hindu religious leaders had been very active during those days and worked to have their way with the Constitution, at the Drafting stage itself to get things done secretly without making things public. In his article ‘Ideal Prophet of Our Age’[1], Agnihotram Ramanuja Thathachariar eulogises and extols the role played by the Sankaracharya of Kanchipuram at the drafting stage of the Constitution. The article throws light on the extent to which his Chaturvarna-oriented suggestions had influenced the Drafting Committee and entered into the Constitution. “Constitutions are often subverted, not by the people, but by small groups, who wish to enhance their own power”[2]
[1] Now, available online too at http://www.kamakoti.org/souv/5-41.html
[2] Text Book of NCERT – Political Science 2 for Class XI. Page-13.
No comments:
Post a Comment