தமிழனைத்
தாக்கி, பிறகு அது தொடர்பாக தமிழர்களையே
ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளவைக்கும் ஆரிய சூழ்ச்சிக்கு இன்றும் இரையாகிக் கொண்டிருக்கும் தமிழர்களின்
செயல்பாடுகள், அர்த்தசாஸ்திரச்
செயல் முறைகள் இன்னும் பலன் அளிக்கக் கூடியவைதான் என்பதையும் தமிழர்களை வைத்தே
தமிழர்களை அழிக்கும் முறையில் தமிழர்கள் ஆரியர்களின் கைப்பாவையாகத் தொடர்ந்து
செயல்படுவார்கள் என்பதையும் காட்டுகிறது.
உலகின் முதன்முதல் அரசியல் பயங்கரவாதியாகிய (The first political terrorist of the world) சாணக்கியன் கி.மு. 300 களில் கையாண்டு, தனது சந்ததியினருக்கும் வழிகாட்டுவதற்காக எழுதி வைத்துச் சென்றுள்ள எண்ணற்ற சதித்திட்டங்களில் சில இதோ. எளிதாக விளக்குவதற்காக அவந்தி, மகதம் என்ற இரண்டு நாடுகளின் பெயர்கள் இங்கே எடுத்தாளப்படுகின்றன. அவந்தி நாட்டு அரசன் எப்படிச் செயல்பட வேண்டும் என்று சாணக்கியன் கூறும் மூன்று விதமான சதித் திட்டங்களாவன:
1. அவந்தி நாட்டு அரசன், தான் வெற்றிபெற விரும்பினால், தனது சிற்றரசர்களில் அல்லது படைததலைவர்களில் முக்கியமான மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் ஒருவர்மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்யவேண்டும். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் எதிரி நாடான, மகத நாட்டு அரசரிடம் சென்று அவருக்கு நண்பராகிவிட வேண்டும். பின்னர் மகத நாட்டுச் சேனைக்கு மேலும் படைவீரர்களைத் தனது நாட்டிலிருந்து கொண்டுவந்து சேர்க்கிறேன் என்று கூறித் தனது அவந்தி நாட்டு ஆட்களை மகத நாட்டுப் படையில் சேர்த்துவிடவேண்டும். மகத நாட்டு மன்னன், தனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்தான் என மகிழ வைக்க வேண்டும்.
2. அவந்தி நாட்டு அரசன், தான் வெற்றிபெற விரும்பினால், தனது சிற்றரசர்களில் அல்லது படைததலைவர்களில் முக்கியமான மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் ஒருவர்மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்யவேண்டும். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் , அவந்தி நாட்டு உளவாளிகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு மகத நாட்டு அரசரிடம் சென்று சேர்ந்து, அவருக்கு நண்பராகிவிட வேண்டும்.அதன்பின், மகத நாட்டின் மீது தனது விசுவாசத்தை நிரூபிப்பதற்காக, தனது படைகளுடன் அவந்தி நாட்டு சிற்றூர் ஒன்றில் நுழைந்து அதனைச் சின்னாபின்னமாக்கி அந்தப் போரில் கிடைக்கும் யானைகள், குதிரைகள், மற்றும் தளைப்படுத்தப்பட்ட வீரர்களை மகத நாட்டு அரசனுக்குக் காணிக்கையாகக் கொண்டுசென்று தரவேண்டும். மகத நாட்டு மன்னன், தனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்தான் என மகிழ வைக்க வேண்டும். ஆனால், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சிற்றூர் அவந்தி நாட்டு அரசனுக்கு விசுவாசம் இல்லாத நாட்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.
3. அவந்தி நாட்டு அரசன், தான் வெற்றிபெற விரும்பினால், தனது சிற்றரசர்களில் அல்லது படைததலைவர்களில் முக்கியமான மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் ஒருவர்மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்யவேண்டும். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் , அவந்தி நாட்டு உளவாளிகளையும், சதிகாரர்களையும், தைரியமாகத் திருடும் வழக்கமுள்ள திருடர்களையும், நண்பன் யார் எதிரி யார் என்று அறியாத மலைவாழ் மக்களையும், தன்னோடு அழைத்துக் கொண்டு மகத நாட்டு அரசரிடம் சென்று சேர்ந்து, அவருக்கு நண்பராகிவிட வேண்டும். மகத நாட்டு அரசனின் நம்பிக்கையைப் பெற்றபின், கொஞ்சம் கொஞ்சமாக கோள் சொல்லத் தொடங்கவேண்டும். மகத நாட்டு எல்லையில் காவல் காக்கும் போர்வீரன் அவந்தி நாட்டு அரசனுக்குச் சார்பாகச் செயல் படுகிறான், அவனை அங்கு வைத்திருப்பது மகத நாட்டுப் பாதுகாப்புக்கு நல்லது அல்ல என்று சொல்லவேண்டும். மகத நாட்டு அரசனை அவ்வாறு நம்பவைத்து, எல்லைப்புறக் காவலனைச் சாகடித்திட வேண்டும். அதேபோல் சொல்லி படைத்தலைவனையும் சாகடித்திட வேண்டும். இவ்வாறாக, அவந்தி நாட்டுக்கு ஆதரவாக மகத நாட்டுக்குள் சென்று செயலபட வேண்டும்.
“The conqueror may dismiss a confidential chief of a corporation. The chief may go over to the enemy as a friend and offer to supply him with recruits and other help collected from the conqueror’s territory; or, followed by a band of spies, the chief may please the enemy by destroying a disloyal village or regiment or an ally of the conqueror, and by sending as a present the elephants, horses, and disaffected persons of the conqueror’s army or the latter’s ally.............Then one of the dismissed ministers may go over to the enemy, taking with him a band of spies, disaffected people, traitors, brave thieves, and wild tribes who make no distinction between a friend and a foe. Having secured the good graces of the enemy, the minister may propose to him the destruction of his officers, such as the boundary-guard, wild chief, and commander of his army, telling him: "These and other persons are in concert with your enemy." Then these persons may be put to death under the unequivocal orders of the enemy”.
(Chapter
III - Book XIII- Arthasastra - Page 439 & 440 )
இவ்வாறு செய்தபின் அந்நாட்டுக்குள் தனது படையுடன் அவந்தி அரசன் மகத நாட்டுக்குள் சென்று வெற்றி கொள்ளலாம் .
Chanakya differs from his teacher and says ‘skill of intrigue’ is better than power (money and army) and explains reasons therefor.
- Page −372 - ibid.
“A pretending
friend may send information to an outsider: “Grains, oil and jaggery and salt
stored in the fort (of the enemy) have been exhausted: a fresh supply of them
is expected to reach the fort at such and such a place and time; seize it by
force”. Then traitors, enemies, or wild tribes, or some other persons specially
appointed for the purpose, may send a supply of poisoned grains, oil, jaggery,
and salt to the fort”.
(Page 430 -
Arthasastra - R. Shamasastry - 1967 Edition - Mysore Printing and Publishing
House)
இன்னும்
விதவிதமான பயங்கரவாதச் செயல் முறைகளையெல்லாம் சாணக்கியன் தன் சந்ததியருக்கு வழி காட்டும் விதத்தில் எழுதி வைத்திருக்கிறான. அவை பின்னர்.
இன்றைய நிலையில் அற நிலையத் துறை அமைச்சர் திரு. சேகர பாபு, இதே வழியில் ஆரியத்தால் தி. மு. க. வில் புகுத்தப் பட்டு ஆரியத்திற்கான அத்தனை கொடிய சதிச் செயல்களையும் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment