ஒரு முறை, 1937 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி திருவாங்கூர் சமஸ்தானத்திற்குச் சென்றிருந்தபோது, கோயில்கள் மிகப்பெருமளவில் சொத்துக்களும், நகைகளும், கொண்டனவாக இருப்பதைக் கண்டார். திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் தங்கத்தினாலான எண்ணற்ற சமையற் பாத்திரங்களும் வைத்திருப்பதைக் கண்டார். சில கோயில்களில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பிராமணர்களை ஒரே நேரத்தில் உட்காரவைத்து விருந்து படைக்கக்கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடங்களைக் கண்டார். ("....vast halls which can seat two or three thousand Brahmins to dinner at a time, and on certain occasions they are thus fed and feasted" (Page -78 - The Epic of Travancore - Mahadev Desai). அங்கு உண்வு உண்ணும் பிராமணர்களுக்குத் தங்கக் கோப்பைகளில் பால் வழங்கப்பட்டது.
ஆனால்,
அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின்
குழந்தைகளுக்கான விடுதியில், உரிய
அளவில் பால் கூடக் கிடைக்கவில்லை. அவர்கள் காந்தியிடம், குஜராத்திலிருந்து இரண்டு மாடுகளை அனுப்புமாறு
கோரினர். அப்போது காந்தி அவர்களிடம் இது தொடர்பாக அதிகாரிகளைக்கேட்குமாறும்,
"பிராமணர்களுக்குத் தங்கக் கோப்பையில்
பால் ஊற்றிக் கொடுப்பவர்கள், அரிசன
மக்களுக்கு பித்தளைக்குவளையில் மோராவது ஊற்றிக்கொடுக்கமாட்டாரகளா" என்றும்
கேட்டார். "You tell the authorities that if they can afford to pour
out milk for the Brahmans from those golden pots, would they not pour out a
little buttermilk for the Harijan boys from brass pots..." (Ibid.). இந்தக் கொடியதொரு சமூக அமசப்புதான்
பிராமணர்களின் ஆளுகையில் கோயில்கள் இருந்தபோது, உருவாக்கப்பட்டிருந்தது.
"ஊட்டுப்புரா"
என்றால் என்ன என்று தேடிப்பார்த்தால், கோயில்களின் பூசகர் உரிமையை பிராமணர்கள் வைத்திருந்தபோது, எவ்வாறு, சமூகத்திற்குப் பயனுள்ள பணி எதையும் தாங்கள்
செய்யாமல், மாற்றார்
உழைப்பில் கோயில் சொத்தில் உண்டுகளித்திருந்தனர் என்பது தெரியவரும். திருவரங்கம்
கோயில் சொத்தும் வருமானமும் கூட இப்படித்தான் அந்தக் கோயிலைச் சுற்றி வாழ்ந்த 40,000
பிராமணர்களை வாழவைப்பதற்காகப்
பயன்படுத்தப்பட்டது. இந்த பிராமணர்கள் வேறு உருப்படியான வேலை ஏதும் செய்யாமல்
சுகம்தேடும் சோம்பேறி வாழ்க்கை (voluptuous idleness") யில் காலத்தைக் கழித்து வந்தனர என்பது வரலாற்று
உண்மையாகும். (“The wall of the outermost square (of Srirangam temple) is
about four mile in circuit. The pagoda owed its celebrity to the supposed
possession of the very image of Vishnu which Brahma used to worship; the
myriads of pilgrims flocking to it sufficed, at one time, to maintain 40,000
Brahmins in voluptuous idleness”, said Henry Beveridge in his book ‘A
Comprehensive History of India - Vol. I’ - Page 579-580, published in 1862. ) அந்தத் திருவரங்கத்துக் கோயில்
சொத்துக்கள் என்ன ஆயின என்பது பற்றிய பல விவரங்கள் , "கோயில் ஒழுகு" சுவடிகளில்
காணக்கிடைக்கின்றன.
இன்றைக்கு,
கோயில் வழிபாட்டு முறையிலும்
நிர்வாகத்திலும் ஓரளவு ஒழுங்கு முறை இருக்கிறது என்றால் , அதற்குப் பின்னால், கி. பி.1803ல் நங்கேலி உயிர்நீத்தது முதல் இருநூறு ஆண்டுகளாக
நடந்த போராட்டமும் தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களும் உள்ளன என்ற
உண்மையை மக்கள் அறிந்திருக்கவேண்டும். அந்தப் போராட்டங்கள், சதுர்வர்ணம் என்ற கயமைத் தனமான அமைப்புக்கு
எதிராகப் பலவடிவில் நடத்தப்பெற்றவை. இந்த நெடும்போராட்டம், பிராமணர்கள் மட்டுமே பூசகர்களாக உள்ள அனைத்துக்
கோயில்களிலும், அனைத்துச்
சாதியினரும் அனைத்து நிலைகளிலும் பூசகர்களாகப் பணியாற்றும் நிலை வரும்போது
நிறைவுக்கு வந்துவிடும்.
கோயிற்சொத்துக்களை
அரசாங்கம் எடுத்துக்கொள்வதை கி.மு. 300 களில், சாணக்கியன்
ஒரு நிர்வாக முறையாகச் செயல்படுத்தினான்.
சாணக்கியன் அரசபதவியில், சந்திர குப்தனுக்கு அமைச்சனாக அதிகாரத்தில் இருந்தபோது கோயில் சொத்தையெல்லாம், சதிப் பிரச்சாரம் செய்து, அதாவது கோயில் சொத்தைத் திருடர்கள் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று அரசின் உளவுத்துறை அலுவலர்கள் மூலமாகப் புரளியைக் கிளப்பிவிட்டு, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அதன்பின் அந்தக் கோயில் சொத்துக்களை அரசாங்க கஜானாவுக்குக் கொண்டுவந்தான். ஆனால், பிராமணர்கள் சொத்துக்கள் மட்டும் இந்தச் சதியினால் பாதிக்கப் படாமல் பார்த்துக்கொண்டான். ( “Spies under the guise of sorcerers, shall, under the pretence of ensuring safety, carry away the money, not only of the society of heretics and of temples, but also of a dead man and also of a man whose house is burnt, provided that is not enjoyable by Brahmans”. - Book V- Chapter II - Replenishment of the Treasury – Arthasastra - R. Shama Sastry— Page 275 ).
அந்தச் சாணக்கியனுடைய வம்சாவழியினர்தாம் இன்று கோயில்கள்
அரசாங்கத்தின் மேற்பார்வையில் இருக்கக் கூடாது என்று பரப்புரை செய்யத்
தொடங்கியுள்ளனர். ஒருநாள் திடீரென்று பாராளுமன்றத்தில் ஒரு நேர்மையில்லாத
சட்டமுன்மொழிவை அறிமுகப்படுத்திவிட்டு, அதனை விவாதம் ஏதுமின்றிச் சட்டமாக்கிவிட்டு, அதனை எதிர்த்துப் போராடுவோர் மீது வன்முறையைக்
கட்டவிழ்த்துவிட்டுக் கொக்கரித்து வேடிக்கை பார்ப்பார்கள். அந்தச் சூழல் வருமுன்
அவர்களது சதித்திட்டங்களை மக்களுக்குத் தெரிவித்துவிடவேண்டும்.
உருவ
வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களான, வேதத்தைக் கொண்டாடும் பிராமணர்கள், உருவ வழிபாடு செய்துவந்த (சிவன் -
உமை : அம்மையப்பன் வழிபாடு) இந்நிலத்து மக்களுடைய கோயில்களுக்குள் புகுந்து பூசகர்
பணியினைப் பிடித்துக்கொண்டு அதனைப் பயன்படுத்தி, சதுரவர்ணக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும்
தலைவர்களை, கோயில்
கருவறைக்குள்ளேயேகூட விதவிதமான முறையில் கொலை செய்தார்கள்.
"Contrivance to kill the enemy may be formed in those places of worship and visit, which the enemy, under the influence of faith, frequents on occasions of worshipping gods and of pilgrimage."(Page 428 - Chapter V - Book XII - Arthasastra) எந்தெந்த விதங்களில் கருவறைக்குள் கொலை செய்யலாம் என்று எழுதிவைத்துச் சென்றிருக்கிறான் சதுர்வர்ண பயங்கரவாதியான சாணக்கியன்.
கோயில்கள்
மக்களின் கட்டுப்பாட்டில்தான்,
அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசின் மேற்பார்வையில்தான் இருக்கவேண்டும். அந்தக் கட்டுப்பாடுகள் மேலும்
அதிகரிக்கப்பட்டு மேலும் வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும். இன்றேல் அவை, கொலைக்களங்களாக, கொடியவர்களின் கூடாரங்களாக
மாறிவிடும்.
பிராமணர்கள் மட்டும் பூசகர்களாக இருக்கும் அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சாதியினரும் பூசகர்களாக அனைத்துப் பணி நிலைகளிலும் பணியாற்றவேண்டும்.
What the Brahmins are practising in India against the natives here, is more wicked and more cruel than the policy of apartheid practiced by the Whites of South Africa against the natives there. In South Africa, the apartheid was skin-deep. But, In India, it is soul-deep.
No comments:
Post a Comment